பொதுவாக வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என எங்கு பார்த்தாலும் பல்புகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். சில தொழில்களுக்கு இன்றே விற்பனை செய்து விட வேண்டும் என்ற கட்டாயம் குறைவாக இருக்கும். உதாரணமாக காய்கறி தொழிலை எடுத்துக் கொண்டால் அவை வீணாவதற்கு முன்பு கண்டிப்பாக விற்பனை செய்து விட வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் பல்புகள், அலுமினிய சாமான்கள் போன்ற தொழில்களுக்கு அது கிடையாது. தொடர்ந்து நிறைய பிசினஸ் ஐடியாக்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் பிஸ்னஸ் ஐடியா LED பல்பு தயாரிக்கும் தொழில். இதற்கு எவ்வளவு முதலீடு தேவை? ஒரு வேலை இந்த தொழிலை தொடங்கினால் தோராயமாக எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்ற விபரங்கள் குறித்து பார்ப்போம்.
LED பல்புகள் மிகவும் நீடித்து வரக்கூடிய ஒன்றாகும். இதை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம். இது தவிர இந்த பல்புகள் பிளாஸ்டிக் கொண்டு செய்யப்படுபவை. எனவே உடைந்து போகும் அபாயமும் குறைவு. LED என்றால் ஆங்கிலத்தில் "Light Emitting Diode" என்று பொருள்.

ஒரு செமி கண்டக்டர் வழியாக எலக்ட்ரான்கள் நுழையும் போது.. அதில் இருக்கும் சின்ன சின்ன துகள்கள் இணைந்து வெளிச்சமாக தோன்றும். இதைத்தான் எல்இடி என்று கூறுகிறோம். ஒரு எல்இடி பல்பின் ஆயுள் பொதுவாக 50,000 மணி நேரம் அல்லது அதற்கும் மேலும் சில வீடுகளில் வரும். அனால் CFL பல்புகள் பற்றி பேசினால் அவை 8000 மணிநேரம் மட்டுமே ஒளியை தரும். இதில் சிறப்பு என்னவென்றால் LED பல்புகளை ரீசைக்கிள் செய்ய முடியும்.
LED பல்பு தொழிலை எவ்வாறு தொடங்குவது?: LED பல்பு தொழிலை தொடங்க திட்டமிட்டால் அதற்கு முதலீடு தேவைப்படும். மேலும் இந்த பல்புகளை எவ்வாறு தயாரிப்பது என்பதற்காக பல நிறுவனங்கள் பயிற்சி வழங்குகின்றன. அரசின் சுய தொழில் திட்டத்தின் கீழ் எல்இடி பல்புகள் தயாரிப்பதற்கான பயிற்சி கிட்டதட்ட எல்லா இடங்களிலும் வழங்கப்படுகிறது.
எனவே நீங்கள் இது போன்ற பயிற்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயிற்சி பெறலாம். LED பல்பு தயாரிப்பதற்கான பயிற்சியின்போது எல்இடி அடிப்படை விஷயங்கள், பிசிபி குறித்த விபரங்கள், led டிரைவர்கள், அதை பொருத்துவதற்கான பயிற்சி, எங்கிருந்து பொருள் வாங்க வேண்டும், சந்தைப்படுத்துவது எப்படி? அரசாங்க மானிய திட்டங்கள் இருக்கிறதா? என பல விஷயங்கள் உங்களுக்கு கற்றுத்தரப்படும். நீங்கள் இந்த தொழிலை சிறிய அளவில் தொடங்க விரும்பினால் வெறும் ரூ. 50,000 முதலீட்டில் தொடங்க முடியும். நீங்கள் ஒரு கடையை திறக்க தேவையில்லை. வீட்டிலிருந்தும் இந்தத் தொழிலை தொடங்க முடியும்.
LED பல்பு மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: ஒரு LED பல்பை தயாரிக்க 50 ரூபாய் செலவாகிறது என்றால் அதை நீங்கள் 100 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். கிட்டத்தட்ட இரட்டிப்பு லாபமாகும். வருமானம் என்பது உங்களுடைய விற்பனை மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொறுத்தது.
அதிக பல்புகள் விற்பனையாகும்போது உங்களுக்கு லாபமும் அதிகமாக கிடைக்கும். மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கான ஐடியா மட்டுமே. பல பிசினஸ் ஐடியாக்கள் இருப்பதால் எதை தொடங்குவது? எப்படி தொடங்குவது? என எண்ணுபவர்களுக்காக தான் இது போன்ற பதிவு. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. பிசினஸ் தொடங்க விரும்பினால் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி.. ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


Click it and Unblock the Notifications