சென்னை: உலகின் முன்னணி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியை தேர்ந்த நிர்வாகிகள் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். இதில் முக்கியமாகக் கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்ய நாடெல்லா, பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸின் நிகேஷ் அரோரா உள்ளிட்டோர் என நீண்ட நெடிய பட்டியல் உள்ளது. ஆனால் முதல் முறையாக அமெரிக்க நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் இந்திய வம்சாவளியைத் தேர்ந்த நிர்வாகிகள் பட்டியலை தயாரிக்கும் அளவுக்கு நிலை மாறியுள்ளது.
இந்த பட்டியலில் உருவாக மிக முக்கியமான காரணம் லக்ஷ்மன் நரசிம்மன், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இவர் தற்போது இப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவர் பதவிக்கு வந்து வெறும் 16 மாதங்களில் தொடர்ந்து 2 காலாண்டுகளில் விற்பனை குறைந்த காரணத்தால் ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் லக்ஷ்மன் நரசிம்மனை இப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிர்வாக அதிகாரிகளில் லக்ஷ்மன் நரசிம்மன் உடன் 2 பேர் உள்ளனர்.
வீக் ஒர்க் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தீப் மத்ராணி, சமீபத்தில் பதவி விலகியுள்ளார். 2020-ஆம் ஆண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆடம் நியூமேனை மாற்றி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற சந்தீப் மத்ராணி, 2023 மே மாதம் பதவி விலகினார்.
இந்த பட்டியலில் இன்னொரு முக்கிய நபர் என்றால் பராக் அகர்வால், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2021 நவம்பரில் ஜாக் டோர்சி பதவி விலகியதைத் தொடர்ந்து, பராக் அகரவால் தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனால், 2022 அக்டோபரில் எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதையடுத்து, பராக் அகரவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கூகுளின் சுந்தர் பிச்சையும் இதே நிலைக்குத் தள்ளப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீண்ட காலமாகச் சுந்தர் பிச்சையை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சையின் கீழ் வளர்ச்சி அடைந்திருந்தாலும், செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் வெற்றியை தாக்குப்பிடிக்க முடியாத காரணத்தால், அவரது பதவி குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. சிலர் அவர் பதவி விலகுவார் அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று கருத்து கடந்த 6 மாதமாக நிலவி வருகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications