பெங்களூரு: இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் வேலை வாய்ப்புக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக வரக்கூடிய பலரும் ஹாஸ்டல்கள் தங்கி வேலைக்கு செல்கின்றனர். சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இவர்களுக்காகவே ஹாஸ்டல், பிஜி ஹோம்கள் செயல்படுகின்றன. இங்கே நாம் தேர்வு செய்யும் அறைகளுக்கு ஏற்ப வாடகை செலுத்த வேண்டி இருக்கும். உணவு உள்ளிட்டவற்றுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். தனி அறை, இரண்டு அல்லது மூன்று பேர் தங்கும் அறை என அதற்கு ஏற்ப வசூல் செய்யப்படுகிறது.

நகரங்களில் இதுபோல ஹாஸ்டல் நடத்துவது நல்ல லாபமான தொழிலாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு மாணவி என்னுடைய கனவு வேலை பெங்களூரில் சொந்தமாக ஒரு ஹாஸ்டலை ஹவுஸை நடத்த வேண்டும் என்பதுதான் தன்னுடைய கனவு என எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
டெல்லியை சேர்ந்த பிடெக் மாணவி மோனாலிசா பட்நாயக் " என்னுடைய கனவு வேலை என்ன தெரியுமா? பெங்களூரில் நான் ஒரு பிஜி உரிமையாளராக இருக்க வேண்டும். வேறு எந்த வேலையும் எனக்கு தேவையில்லை. இதன் மூலம் கிடைக்கும் வாடகை வருமானமே எனக்கு போதுமானதாக இருக்கும். மேலும் என்னிடம் தங்க வருபவர்களிடம் வசூல் செய்த டெபாசிட் தொகையும் திரும்ப தரபோவதில்லை" என கிண்டலாக கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு 5 லட்சத்துக்கு அதிகமானவர்களின் பார்வைகளை பெற்றுள்ளது.
பலரும் பெங்களூரு போன்ற பகுதிகளில் ஹாஸ்டல்களில் அதிகப்படியான வாடகை வசூல் செய்யப்படுவது தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஒரு பயனர் பெங்களூருக்கு சென்று நீங்கள் ஸ்டார்ட் அப் தொடங்கி பெரிய பணக்காரர் ஆக வேண்டும் என அவசியம் இல்லை, ஹாஸ்டல் நடத்தினால் பெரும் பணம் ஈட்டிவிடலாம் என கூறியுள்ளார்.
ஹாஸ்டல்களில் பணம் வாங்குகின்றனர் ஆனால் அதற்கேற்ப உணவு மற்றும் பிற வசதிகளை வழங்குவதில்லை என ஒரு பயனர் கூறியுள்ளார். பலரும் பெங்களூருவில் செயல்படும் ஹாஸ்டல்களில் டெபாசிட் பணத்தை உரிமையாளர்கள் திரும்ப தருவதில்லை இதுவே அவர்களுக்கு கணிசமான வருமானத்தை தந்துவிடும் என கூறியுள்ளனர். ஒரு பயனர் மோசமான உணவு ,மோசமான இருப்பிடம் இருந்தாலும் பல ஆயிரங்களை வாடகையாக வசூல் செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் சொந்தமாக இடம் இருப்பவர்கள் ஹாஸ்டலாக மாற்றி வாடகைக்கு விட்டாலே லைஃப் செட்டிலாகிவிடும் என பலரும் தங்களின் எண்ணங்களை கருத்தாக பதிவிட்டுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications