கேரளா: இளம் வயதிலேயே நிதி சிக்கல்களை எதிர்கொண்டு அதை கடந்து வந்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தவர்களின் கதை நம் அனைவருக்கும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தை கொடுக்கும். அப்படி வெறும் 50 ரூபாயில் தன்னுடைய தொழில் பயணத்தை தொடங்கி தற்போது 14,000 கோடி மதிப்பிலான ஒரு ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர்.
கேரள மாநிலம் பாலகாட்டை சேர்ந்தவர் பிஎன்சி மேனன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த நிலையில் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் பிஎன்சி மேனன் படிப்படை பாதியிலேயே கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலுக்கு ஆளானார் மேனன். கேரளாவில் சிறு சிறு வேலைகளை செய்து வந்த அவருக்கு ஓமனுக்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இது தான் அவரது வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.

கையில் வெறும் 50 ரூபாயுடன் ஓமன் சென்ற அவர் பல துறைகளில் வேலை செய்ய தொடங்கினார். இப்படி தான் அவருக்கு ரியஸ் எஸ்டேட் மற்றும் இண்டீரியர் டிசைன் துறைகளில் ஆர்வம் ஏற்பட்டது. படிப்படியாக இந்த துறையின் நுணுக்களை கற்றுக் கொண்டார்.
ஓமனில் பல சவால்களுக்கு மத்தியில், 1990களில் ரியல் எஸ்டேட் துறையில் பணிக்கு சேர்ந்தார். இதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு இவர் 1995 ஆம் ஆண்டு சோபா டெவலப்பர்ஸ் (தற்போது சோபா லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது ) என்ற ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கினார்.
தற்போது இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக இது இருக்கிறது. தனிப்பட்ட முறையில் பல்வேறு ப்ராஜெக்டுகளை எடுத்தார். இவரது டிசைன்களுக்கு மக்களிடையே குறிப்பாக அரபு நாட்டவரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கென படித்தவர்கள் கூட இப்படி ஒரு அலங்காரத்தையும் வடிவத்தையும் கொடுக்க முடியாது என்ற பெயரை பெற்று இன்றும் சந்தையில் நிலைத்து நிற்கார் மேனன்.
இவருக்கு மத்திய அரசு பிரவாசி பாரதிய சம்மான் புஷ்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது . சோபா லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது தற்போது 14,100 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது, அரசு நாடுகளில் செயல்படும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகவும் இது உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இதன் ஒரு பங்கு மதிப்பு 1,553 ரூபாய் என வர்த்தகமாகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications