சொந்த நிலம் வாங்க வேண்டும் என்பது சாமானியர்களின் நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்ற ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனரான அக்ஷத் ஸ்ரீவஸ்தவா, முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒவ்வொருவரும் தங்களுடைய நிதிநலனை ஆராய்வது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
துபாயில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும், இந்தியாவில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும் ஒப்பிட்டு பேசிய அக்ஷத், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களுக்கு முக்கிய செய்தியையும் பகிர்ந்துள்ளார். அதாவது ஒருவரின் மொத்த வருமானத்தில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக வீட்டு கடன் ஈஎம்ஐ இருந்தால், அது அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அக்ஷத் ஸ்ரீவஸ்தவா தன்னுடைய X பதிவில், "அடிக்கடி நான் துபாயில் இந்திய தம்பதிகளை சந்தித்து வருகிறேன். அங்கு அவர்கள் இரண்டு முதல் மூன்று சொத்துக்களில் முதலீடு செய்துள்ளனர். அவற்றை வாடகைக்கு விட்டு தங்கள் ஓய்வு கால நிதியாக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற சொத்துக்களில் முதலீடு செய்யும் பணக்காரர்களை நான் குறிப்பிடவில்லை. சாதாரணமாக கடினமாக உழைத்து பணம் சேமித்து 10 முதல் 15 வருடங்கள் கழித்து செல்வம் சேர்த்து சொத்துக்களில் முதலீடு செய்யும் தம்பதிகளை தான் குறிப்பிட்டுள்ளேன்.
இப்படி உழைத்து எப்படி சொத்தில் முதலீடு செய்கிறார்கள் என்பதற்கான கணக்கையும் ஸ்ரீவஸ்தவா பகிர்ந்திருந்தார். துபாயில் வசிக்கும் தம்பதியினர் 5% வட்டிக்கு கடன் வாங்கி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து, தங்கள் சொத்துக்களை 6 முதல் 7 சதவீத வருமானத்தில் வாடகைக்கு விடுகின்றனர். இதனால் அவர்கள் ஈஎம்ஐ சுமையால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை.
இதற்கு நேர்மாறாக இந்தியாவில் உள்ள இந்திய தம்பதிகளின் நிலையையும் ஸ்ரீவஸ்தவா சுட்டிக் காட்டியிருந்தார். இந்தியாவில் உள்ள தம்பதிகளின் கதை இதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கும். முதலில் அவர்கள் ஒரே ஒரு சொத்தை வாங்குகின்றனர். 10 சதவீத வட்டியில், அந்த சொத்தில் முதலீடு செய்ய கடன் பெறுகின்றனர். ஆனால் மூன்று சதவீத வருமானம் தான் பெறுகின்றனர். ஒருவரின் வருமானம் தொடர்ந்து இதனால் இஎம்ஐ-க்கு தான் செல்கிறது.
துபாய் ரியல் எஸ்டேட் சந்தை சிறந்தது என்றோ அல்லது இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை சிறந்தது என்றோ நான் கூறவில்லை. இந்த இரண்டு பகுதிகளிலும் சொத்து வாங்குவதால் ஏற்படும் சுமை என்ன? சுதந்திரம் என்ன? என்பதை தான் சொல்ல விரும்புகிறேன்.
இதிலிருந்து நான் கூற வருவது என்னவென்றால், இந்தியாவில் வீடு வாங்குபவர்கள் ஒரு எளிய விஷயத்தைப் பின்பற்றலாம். வீட்டின் ஈஎம்ஐ தொகை உங்கள் மொத்த வருமானத்தில் 33 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஒருவேளை இருந்தால் இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்று விளக்கியிருந்தார். அதோடு இந்திய ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications