இந்திய ஐடி நிறுவனங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஊழியர்களுக்கான தட்டுப்பாடு அதிகமாகியுள்ளது, குறிப்பாக உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஊழியர்களுக்குப் பல நிறுவனங்களின் அதிகளவிலான சம்பளம் அளிக்கப்படும் காரணத்தால் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு ஊழியர்கள் அதிகளவில் செல்ல துவங்கியுள்ளனர்.
இதேநிலை தான் தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது, ஆனால் சில முக்கியச் சம்பள மாற்றங்கள் உடன் ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
டெக் ஸ்டார்ட்அப்
கொரோனா தொற்றுக் காரணமாகப் பல துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், டிஜிட்டல் சேவைகளுக்கு மாற நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளது. இதனால் இந்திய ஐடி மற்றும் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகமான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
டிஜிட்டல் டெக்னாலஜி வர்த்தகம்
சிறிதும், பெரிதுமாக டிஜிட்டல் டெக்னாலஜி தொடர்புடைய திட்டங்கள் அதிகளவில் இருக்கும் காரணத்தால் இத்துறையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. இப்பிரிவில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மிகவும் குறைவு என்பதால் டிமாண்டு-க்கு ஏற்ப சம்பளம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வேற லெவலில் அதிகரித்துள்ளது.
முதலீட்டு அளவு அதிகரிப்பு
கொரோனாவுக்குப் பின்பு இந்திய டெக் நிறுவனங்களில் முதலீட்டு அளவு அதிகரித்துள்ள நிலையிலும், அதிக வர்த்தகங்கள் கிடைக்கும் காரணத்தாலும் ஊழியர்களை நிறுவனத்தில் சேர்க்கும் போது சம்பளத்தை வாரிவழங்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சம்பள உயர்வின் அளவை கேட்டாலே அதிர்ச்சியாக உள்ளது.
50 சதவீதம் சம்பள உயர்வு
இந்திய டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இன்ஜினியர், டேட்டா அனலிஸ்ட், டெவலபர், பிராடெக்ட் மேனேஜர் ஆகிய பிரிவில் 3 முதல் 7 வருட அனுபவம் கொண்ட ஊழியர்களுக்குச் சராசரியாகவே சுமார் 50 சதவீதம் சம்பள உயர்வைப் பெறுகின்றனர்.
இந்திய ஸ்டார்ட்அப் வரலாறு
2014-15ஆம் ஆண்டுகளில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகப்படியான முதலீடு இருந்த வேளையில் ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பளம் கொடுக்கப்பட்டது. இதேபோன்ற 'hiring bubble' தான் தற்போது உருவாகியுள்ளது.
hiring bubble பிரச்சனை
இந்த 'hiring bubble' மூலம் நிறுவனங்களுக்கு அதிகளவிலான ஊழியர்கள் கிடைத்தாலும், குறுகிய காலம் அல்லது நீண்ட கால அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமை பெரிய அளவில் பாதிக்கப்படும். இதேவேளையில் வர்த்தகம் கிடைக்கும் அளவீடுகள் குறைந்தாலும் நிறுவனத்தின் நிதிநிலை பாதிக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications