இந்தியாவின் தலைமையின் கீழ் தொடங்கப்பட்ட ஜி20 கூட்டம் உலகமே வியக்கும் வகையில் நடந்து முடிந்த நிலையில் அடுத்த ஒரு வருடத்திற்கான தலைமை பொறுப்பை பிரேசில் பெருகிறது. இந்திய தலைமையிலான கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகளும், தீர்வுகளும் காணப்பட்டது மறக்க முடியாது.
இதில் முக்கியமாக இந்தியா - வளைகுடா நாடுகள் - ஐரோப்பா மத்தியிலான ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து கட்டமைப்பு கொண்ட வர்த்தக போக்குவரத்து திட்டம், மாற்று எரிபொருள் அதாவது பயோபியூயல் திட்டம், 6ஜி சேவைக்கான தொழில்நுட்ப கூட்டமைப்பு திட்டம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றள்ளது.

இந்த நிலையில் இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டத்தில் ஸ்டார்ட்அப் 20 என்கேஜ்மென்ட் குரூப் உருவாக்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த ஸ்டார்ட்அப் 20 என்கேஜ்மென்ட் குரூப் இந்த ஜி20 கூட்டத்தோடு நிற்காமல் அடுத்த ஜி20 கூட்டத்திலும் தொடர உள்ளது.
ஸ்டார்ட்அப் 20 என்கேஜ்மென்ட் குரூப் உருவாக்கப்பட்டு உள்ளதை அடுத்து இந்தியா ஸ்டார்ட்அப் அமைப்பில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்கள் என ஸ்டார்ட்அப் துறையை சேர்ந்த அனைவரும் வரவேற்றனர்.
இந்த ஸ்டார்ட்அப் 20 என்கேஜ்மென்ட் குரூப் ஜி20 நாடுகள் இணைந்து ஸ்டார்ட்அப் துறையை எப்படி மேம்படுத்துவது என பல முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டு உள்ளது, இந்த நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் இக்குழு செய்யப்பட்ட பரிந்துரைகளை எப்படி செயல்படுத்துவது என்பதில் இக்குழு செயல்படும் என்று கூறினார்.
ஜி20 கூட்டத்தில் ஸ்டார்ட்அப் 20 என்கேஜ்மென்ட் குரூப் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஸ்டார்ட்அப் மற்றும் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நேச்சுரல் இன்ஜின் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
இன்னோவேஷன் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் அவை சமூக - பொருளாதார மாற்றத்திற்கு முக்கிய பங்களிக்கிறது என்று கூறி இந்தியாவின் ஜி20 தலைமை பொறுப்பில் ஸ்டார்ட்அப்20 என்கேஜ்மென்ட் குரூப் நிறுவுவதையும், அதை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப்20 என்கேஜ்மென்ட் குழு அதன் கீழ் மூன்று பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளது. அவை, அடிப்படை மற்றும் கூட்டணிகள், நிதி, மற்றும் உள்ளடக்குதல் மற்றும் நிலைத்தன்மை ஆகும். மேலும் இந்த குழுவை நிதி ஆயோக்கின் முதன்மையான தொழில்முனைவோர் முன்முயற்சி திட்டமான அடல் இன்னோவேஷன் மிஷனின் பணி இயக்குனர் சிந்தன் வைஷ்ணவ் தலைமை தாங்கி இந்த அறிக்கையை வெளியிட்டார்.
பீக் XV பார்ட்னர்ஸ் முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜன் ஆனந்தன், ஜி20 நிதிப் பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்தார். இவர் ஸ்டார்ட்அப்20 என்கேஜ்மென்ட் குழு குறித்து பேசுகையில் ஒவ்வொரு ஜி20 நாடுகளும் 2030 ஆம் ஆண்டிற்குள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% முதலீட்டை ஸ்டார்ட்அப் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என கூறினார்.


Click it and Unblock the Notifications