கொரோனா பாதிப்பின் காரணமாக வர்த்தகத்தை இழந்து நிதிநெருக்கடியில் சிக்கிய இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை நடத்தச் செலவுகளைப் பல வகையில் குறைத்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்தும், பணியில் இருக்கும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகளவில் குறைத்தது.
இந்தச் சம்பள குறைப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் கடந்த 5 மாதங்களாக நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போது சில முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முழுச் சம்பளத்தைக் கொடுக்கத் துவங்கியுள்ளது.
லாக்டவுன்
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் நாட்டின் மொத்த வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் முடங்கியது, இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இதைச் சமாளிக்கவே செலவின குறைப்பில் இறங்கியது.
இதிலும் முக்கியமான இந்தியாவில் இருக்கும் 90 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளம் குறைப்பதன் மூலம் அதிகளவிலான பணத்தை இக்காலகட்டத்தில் சேமித்தது.
முழுச் சம்பளம்
இந்நிலையில் இந்தியாவில் இன்னும் கொரோனா தொற்று முழுமையாகக் குறையாத நிலையில் இன்னும் பல பகுதிகளில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த லாக்டவுன் நிலவுகிறது. இதனால் நாட்டில் வர்த்தகச் சந்தை முழுமையாக மீட்சி அடையாத போதிலும் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 5 மாதங்களாகச் சம்பள குறைப்பில் இருந்து ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்தைக் கொடுக்கத் துவங்கியுள்ளது.
Oyo
சமீபத்தில் இந்தியாவில் முன்னணி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான OYO நிறுவனத்தில் 8 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் முழுச் சம்பளம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் 60 சதவீத ஊழியர்கள் முழுச் சம்பளத்தை வாங்க உள்ளனர்.
மற்ற ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பள குறைப்பில் இருந்து 12.5 சதவீத சம்பளம் மட்டுமே இனி வரும் மாதங்களில் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது oyo நிர்வாகம்.
பிற நிறுவனங்கள்
இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு அப்கிராட், சோமேட்டோ, க்ரோபர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்தைக் கொடுப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
போனஸ் மற்றும் சம்பள உயர்வு
இதோடு பல நிறுவனங்கள் இந்த மாதம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் போனஸ் ஆகியவற்றைக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக PWC மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications