இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மும்பையில் சுமார் 60 அப்பார்ட்மென்ட்களை வாங்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியுள்ளது. இதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த திட்டத்தில் பணியாற்ற ஆர்கிடெக்ட்-களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மூத்த அதிகாரிகளை தங்க வைக்கவும், முக்கிய அதிகாரிகளின் வருகையின் போது பயன்படுத்தவும் இந்த 60 அப்பார்ட்மென்ட்களை வாங்க உள்ளது. இந்த 60 அப்பார்ட்மென்ட்களை வாங்கும் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது எஸ்பிஐ.

இந்த திட்டத்திற்காக விண்ணப்பம் அளிக்கும் ஆர்கிடெக்ட்-களை ஆய்வு செய்து தேர்வு செய்யப்படுபவர், 60 அப்பார்ட்மென்ட்களை தேடி வாங்கி கொடுப்பது மட்டும் அல்லாமல் இத்திட்டங்களின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து நிர்வாகத்திடம் ஓப்படைக்கும் பொறுப்பும் உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த 60 அப்பாரட்மென்ட்களை ஒரே இடத்தில் அல்லது ஒரே வளாகத்தில் தேடி வருகிறது, இதன் மூலம் இந்த அப்பார்ட்மென்ட் ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் வளாகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த முக்கியமான பணியில் ஈடுபடும் ஆர்கிடெக்ட்-களுக்கு என்ன லாபம்.
எஸ்பிஐ தேர்வு செய்யும் இந்த ஆர்கிடெக்ட்-களுக்கு மொத்த திட்டத்தின் 0.5 சதவீதம் தொகை கமிஷனாக அளிக்கப்படும். இந்த தொகை 500 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த 60 அப்பார்ட்மென்ட்களை பரேல், லோவரே பரேல், வார்லி மற்றும் மகாலட்சுமி பகுதியில் தேடி வருகிறது.
இந்த திட்டம் மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சொந்தமாக வைத்திருக்கும் அப்பார்ட்மென்ட் எண்ணிக்கை 500 ஆக உயர உள்ளது. இதில் 1BHK, 2BHK, 3BHK வீடுகளும் அடங்கும். இந்த 500 அப்பார்ட்மென்ட்-களும் மும்பையில் இருப்பது மிகவும் முக்கியமான விஷயம்.
பொதுவாக தனியார் வங்கிக்கும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்த வித்தியாசத்தை ஈடு செய்ய முக்கிய நகரங்களில் முக்கிய பகுதிகளில் தங்குவதற்காக வீடுகளை இலவசமாக அளிக்கிறது. இதன் மூலம் பெரும் தொகையை எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் சேமிக்க முடியும்.
இதேபோல் எஸ்பிஐ மூத்த அதிகாரிகளுக்கு பயன்படுத்த சொந்தமாக கார்களும் அளிக்கப்படுகிறது. பெரு நகரங்களில் பெரிய செலவே தங்கம் வீடுக்கான வாடகையும், போக்குவரத்தும் தான், இதை நிர்வாகமே ஈடுசெய்யும் காரணத்தால் சம்பளம் குறைவாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications