அதானி – ஆஸ்திரேலியா பிரச்சினை.. கடன் கொடுக்க தயங்கும் எஸ்பிஐ.. முடிவு தான் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலியா அரசின் உத்தரவுடன் அதானி, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்ட சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி கிடைத்தது. இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் பிறப்பிக்கப்பட்டது முதல் கொண்டு ஆஸ்திரேலியாவில், இதற்கு எதிரான போராட்டங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

அதுமட்டும் அல்ல, நிலக்கரி சுரங்கம் தோண்ட இருக்கும் அதானியின் கார்மைக்கேல் நிலக்கரி நிறுவனத்திற்கு, இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்பிஐ 1 பில்லியன் டாலர் கடனை கொடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில் தான் போராட்டம் இன்னும் விரிவடைந்தது எனலாம். ஏனெனில் எஸ்பிஐ அதானி கடன் கொடுக்க கூடாது என்ற பலமான கோரிக்கைகளும் எழுந்தன.

கடன் கொடுக்க மறுப்பு

கடன் கொடுக்க மறுப்பு

இதற்காக கடந்த ஆண்டில் இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி நடந்த மைதானத்திலேயே எதிர்ப்புகள் கிளம்பியது. முதலில் ஆஸ்திரேலிய வங்கிகள் மூலம் நிதி திரட்ட முயற்சித்த அதானி, அது தோல்வியில் முடிந்த நிலையில், பின்னர் உலகின் பல வங்கிகளும் இதற்காக கடன் கொடுக்க மறுத்தன. ஆஸ்திரேலிய வங்கிகள் மட்டும் அல்ல, பார்கிலேஸ், ஜேபி மார்கன், சிட்டி பேங்க், ஹெச்எஸ்பிசி, பிஎன்பி பரிபாஸ், ஆர்பிஎஸ் உள்ளிட்ட உலக வங்கிகள் கூட, அதானிக்கு கடனை நிராகரித்து விட்டன.

ஏன் இந்த நிராகரிப்பு?

ஏன் இந்த நிராகரிப்பு?

மேற்கண்ட முன்னணி வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் அதானியின் இந்த திட்டத்திற்கு கடன் கொடுக்க மறுத்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக மக்கள் எதிர்ப்பு, சுற்றுசூழல் பிரச்சனை பொருளாதார சாத்தியக்கூறு என்பதும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆரம்பத்தில் 16 பில்லியன் டாலர் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தினை 2 பில்லியனாக குறைத்துக் கொண்டது அதானி குழுமம்.

எஸ்பிஐ தரப்பு என்ன சொல்கிறது?
 

எஸ்பிஐ தரப்பு என்ன சொல்கிறது?

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில், பல்வேறு உலக வங்கிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கடன் கொடுக்க நிராகரித்துள்ளதை தொடர்ந்து, நிதியளிக்கலாமா வேண்டாமா? என்பதை இன்னும் இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனர் தீர்மானிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து வங்கி நிர்வாக குழு எந்த முடிவையும் எடுக்கவில்லை. விவாதிக்கவும் இல்லை என தெரிகிறது.

எஸ்பிஐ பங்குதாரர்கள் எதிர்ப்பு

எஸ்பிஐ பங்குதாரர்கள் எதிர்ப்பு

இந்த கார்மைக்கேல் சுரங்கம் 2010ல் முன்மொழியப்பட்டத்தில் இருந்தே, தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளது. இதற்கிடையில் எஸ்பிஐ-யின் பங்குதாரர்கள் போராட்டகளத்திற்கு ஆதாரவாக திரும்பினர். பிளாக்ராக் மற்றும் நோர்வேயின் ஸ்டோர் பிராண்ட் ஏஎஸ்ஏ தங்களது ஆட்சேபனைகளை எழுப்பின. இதே Amundi SA குழுமம், எஸ்பிஐ கார்மைக்கேல் சுரங்கத்துடனான உறவுகளுக்கு பின், தன்னிடம் இருந்த (SBI's green bonds) பத்திரங்களை கூட விற்று தனது எதிர்ப்பினை காட்டியது.

எஸ்பிஐ பங்குதாரர்கள் எதிர்ப்பு

எஸ்பிஐ பங்குதாரர்கள் எதிர்ப்பு

இந்த கார்மைக்கேல் சுரங்கம் 2010ல் முன்மொழியப்பட்டத்தில் இருந்தே, தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளது. இதற்கிடையில் எஸ்பிஐ-யின் பங்குதாரர்கள் போராட்டகளத்திற்கு ஆதாரவாக திரும்பினர். பிளாக்ராக் மற்றும் நோர்வேயின் ஸ்டோர் பிராண்ட் ஏஎஸ்ஏ தங்களது ஆட்சேபனைகளை எழுப்பின. இதே Amundi SA குழுமம், எஸ்பிஐ கார்மைக்கேல் சுரங்கத்துடனான உறவுகளுக்கு பின், தன்னிடம் இருந்த (SBI's green bonds) பத்திரங்களை கூட விற்று தனது எதிர்ப்பினை காட்டியது.

கடன் கொடுக்க தயக்கம்

கடன் கொடுக்க தயக்கம்

இதற்கிடையில் கடந்த அக்டோபரில் எஸ்பிஐயின் தலைவராக பொறுப்பேற்ற தினேஷ் குமார் காரா, ஆஸ்திரேலியா திட்டத்திற்கு எதிர்ப்புகள் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், அதானிக்கு கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுவதாக வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆக இதுவரையிலும் கூட கடன் வழங்குவது குறித்தான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதானியின் அறிக்கை

அதானியின் அறிக்கை

எனினும் அதானி ஓர் அறிக்கையில் கார்மைக்கேல் சுரங்கத்தின் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாங்கள் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்கான பாதையில் உள்ளோம் என்றும் கூறியிருந்தார். மேலும் அதன் சுரங்க மற்றும் ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எனினும் யார் அந்த நிதியினை வழங்கினார்கள் என்ற எந்த விபரமும் கொடுக்கப்படவில்லை. எனினும் இது குறித்து எஸ்பிஐ தரப்பிலும் எந்த கருத்தும் வெளியாகவில்லை. ஆக மொத்தத்தில் உண்மை நிலவரம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

State bank of india drags its feet on billionaire adani coal loan

Adani updates.. State bank of india drags its feet on billionaire adani coal loan
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X