இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), ரூ.2 கோடி வரையிலான தனிநபர் ரீடைல் வைப்புத் நிதி திட்டத்திற்கும், பல்க் டெபாசிட் திட்டத்தமான பெரிய வைப்புத் நிதி திட்டங்களுக்கு (ரூ.2 கோடிக்கு மேல்) சில குறிப்பிட்ட கால இடைவெளிக்கு மட்டும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள விபரங்கள் படி, இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய வட்டி விகிதங்களை தெரிந்துகொண்டு உங்க வைப்பு நிதிக்கு கூடுதலான வருமானத்தை பெறுங்கள்.

எஸ்.பி.ஐ வைப்புத் தொகைக்கான புதிய வட்டி விகிதங்களில் ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள வைப்புத் தொகைக்கு 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான காலத்திற்குள் முதிர்ச்சியடையும் வைப்புத் தொகைகளுக்கு வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, பொதுவான மக்களுக்கு 4.75% லிருந்து 5.50% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 5.25% லிருந்து 6% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான காலத்தில் முதிர்ச்சியடையும் வைப்புத் தொகைகளுக்கு வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 5.75% லிருந்து 6% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் 211 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான காலத்திற்கு முதிர்ச்சியடையும் வைப்புத் தொகைகளுக்கு வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 6% லிருந்து 6.25% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 6.50% லிருந்து 6.75% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.2 கோடிக்கும் அதிகமாக தொகை கொண்ட பல்க் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான புதிய வட்டி விகிதம்: 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான காலத்திற்கு முதிர்ச்சியடையும் பெரிய வைப்புத் நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 5% லிருந்து 5.25% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 5.50% லிருந்து 5.75% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான காலத்திற்கு முதிர்ச்சியடையும் பெரிய வைப்புத் நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, பொதுவான மக்களுக்கு 5.75% லிருந்து 6.25% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 6.25% லிருந்து 6.75% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான காலத்திற்கு முதிர்ச்சியடையும் பெரிய வைப்புத் நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.50% லிருந்து 6.60% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 7% லிருந்து 7.10% ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் 1 வருடத்திற்கு குறைவாக, 2 வருடத்திற்கு குறைவான திட்டத்திற்கு 6.80 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக மாற்ற உள்ளது.
மேலும் 2 வருடத்தில் 3 வருட வைப்பு நிதி திட்டத்திற்கு 6.75 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications