இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), 2019ஆம் நிதியாண்டு முதல் சத்தமில்லாமல் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் அதன் மொத்த பணியாளர் எண்ணிக்கை கடந்த 5 வருடத்தில் 10% குறைத்துள்ளது, இதன் மூலம் சுமார் 25,000 ஊழியர்கள் குறைக்கப்பட்டு உள்ளனர். பொதுவாக வங்கி தனது சேவைகளையும், கிளையும் விரிவாக்கம் செய்யும் போது ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ஆனால் எஸ்பிஐ வங்கியில் நிலைமை தலைகீழாக உள்ளது, பங்குச் சந்தையில் எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த தகவல்கள் படி மார்ச் 31, 2024 நிலவரப்படி எஸ்பிஐ வங்கியின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,32,296 ஆக இருந்தது. ஆனால், 2019 ஆம் நிதியாண்டின் இறுதியில் இந்த எண்ணிக்கை 2,57,252 ஆக இருந்தது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்திய வங்கி துறையில் மிகக் குறைவான ஊழியர் வெளியேற்ற விகிதம் அதாவது அட்ரிஷன் விகிதத்தை எஸ்பிஐ கொண்டிருந்தாலும் இந்த பணியாளர் எண்ணிக்கைக் குறைப்பு நடந்துள்ளது, கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது.
2024ஆம் நிதியாண்டின் முடிவில் எஸ்பிஐ ஊழியர் வெளியேற்ற விகிதம் வெறும் 1.43 சதவீதமாகவே இருந்தது. இதேவேளையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் 10 சதவீதத்தைத் தாண்டுகிறது.
2019 நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5,000 ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இதில் 2023 நிதியாண்டில் அதிகபட்சமாக 8,392 ஊழியர்கள் குறைக்கப்பட்டு உள்ளனர்.
எஸ்பிஐ வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கைக் குறைப்பு மூலம் இவ்வங்கியில் லாபத்தை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது முக்கியமான விஷயமாகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர்.
2020 நிதியாண்டில் ஒரு ஊழியருக்கு 5.8 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டிய எஸ்பிஐ, 2024 நிதியாண்டில் ஒரு ஊழியருக்கு 26.2 ரூபாய் லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இந்த ஒரு விஷயம் போதாதா என்ன!!. 2022 முதல் 2024 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், எஸ்பிஐயின் நிகர லாபம் ₹61,077 கோடி ஆக, ஆண்டு வளர்ச்சி விகிதம் 44% ஆக இருந்தது.
அதே நேரத்தில், 2024 நிதியாண்டில் எஸ்பிஐ-யின் ஊழியர் செலவுகள் 24 சதவீதம் அதிகரித்து 71,237 கோடி ரூபாய் ஆக உயர்ந்தது. மேலும், 12வது இருதரப்பு சம்பள உடன்பாட்டுத் தீர்வைக் கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் வங்கி 13,387 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டை எஸ்பிஐ நிர்வாகம் வழங்கியுள்ளது.
குறைந்த பணியாளர் எண்ணிக்கையுடன் லாபத்தை அதிகரிக்கும் இந்த உத்தி எதிர்காலத்தில் எஸ்பிஐக்கு எவ்வாறு பலன் தரும் என்பதைப் பொறுத்திருந்து காண வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications