இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று முதல் தனது சேமிப்பு கணக்குகளான டெபாசிட் தொகைக்கான வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய கடந்த மாதமே இது குறித்தான அறிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரி எவ்வளவு வட்டி குறைப்பு என்று கேட்கிறீர்களா? வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்குகளில் 1 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வைத்திருந்தால், இனி 3.25 சதவிகிதம் மட்டுமே வட்டி என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
வட்டி குறைப்பு
கடந்த அக்டோபர் மாதத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்பு கணக்குகளில் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைகளுக்கு, வட்டி விகிதம் 3.5 சதவிகிதத்திலிருந்து, 3.25 சதவிகிதமாக குறைத்தது. இந்த வட்டி குறைப்பானது கடந்த மாதம் செய்யப்பட்டிருந்தாலும், இன்று முதலே அமலுக்கு வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வர்த்தக வங்கியான இது 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வைப்புத் தொகை வைத்துள்ளது.
இந்த வைப்புத் தொகைக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
எனினும் இதே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கான வட்டியில் ஏதும் மாற்றம் இல்லை என்றும், எஸ்பிஐ தன் சேமிப்பு கணக்கு டெபாசிட்தாரர்களுக்கு வழங்கும் வட்டியை ரிசர்வ் வங்கியின் ரெபோ விகிதத்துடன் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படி இந்த வட்டி விகிதமானது, ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை எப்போதெல்லாம் மாற்றுகிறதோ. அப்போதெல்லாம் எஸ்.பி.ஐயின் டெபாசிட் வட்டி விகிதத்திற்கான வட்டி விகிதமும் மாறுபடும்.
டெர்ம் டெபாசிட் தொகைக்காக வட்டி குறைப்பு
இதே எஸ்.பி.ஐ ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான டெர்ம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 30 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே 2 கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை கொண்ட கணக்குகள் முந்தைய விகிதமானது 6.3 சதவிகிதமாகவும், இது தற்போது 6%மாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமல்படுத்தப்பட்ட வட்டி விகிதம்
இதே இன்னும் 2 கோடி ரூபாய்க்கு கீழ் டெபாசிட்தாரர்களுக்கான வட்டி விகிதமானது, கடந்த அக்டோபர் 10லிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வட்டி விகிதமானது 7 - 45 நாட்களுக்கான வைப்புத் தொகைக்கு 4.50%மாகவும், 46 - 179 நாட்களுக்கான டெபாசிட் தொகைக்கு 5.50%மாகவும், 180- 210 நாட்களுக்கான வட்டி விகிதமானது 5.80%மாகவும், இதே 211 - 1 வருடத்துக்குள் உள்ள டெபாசிட் தொகைக்கு 5.8 சதவிகிதமாகவும், 1 - 2 வருடத்துக்கு 6.4%மாகவும், 2 - 3% வருடத்துக்கு 6.25%, 3 -5% வருடத்துக்கு 6.25%மாக, 5 - 10 வருடத்துக்கான வைப்புத் தொகைக்கு 6.25%மாகவும் இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications