நடுத்தர மக்களைப் பாடாய் படுத்தி வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மிகப்பெரிய தளர்வைக் கொடுத்தது மத்திய அரசு. தீபாவளிக்கு முந்தைய நாள் மத்திய அரசு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்த நிலையில் வியாழக்கிழமை முதல் மக்கள் குறைக்கப்பட்ட புதிய விலையின் படி பெட்ரோல், டீசலை வாங்கி வருகின்றனர்.
மத்திய அரசுக்குப் போட்டியாக இந்தியாவில் பல மாநிலங்கள் அதிகளவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. இது மக்களுக்கு டபுள் ஷாட் பட்டாசு போல் கொண்டாட்டமாக அமைந்தது என்றால் மிகையில்லை.
அப்படி எந்த மாநிலம் எவ்வளவு விலையைக் குறைத்தது தெரியுமா..?!
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு கொடுத்த விலை தளர்வுகளை விடவும் இந்தியாவில் பல மாநிலங்களில் அதிகப்படியான விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சாமானிய மக்களுக்கு இரு தரப்பில் இருந்தும் விலை சலுகை கிடைத்துள்ள காரணத்தால் அதிகப்படியான சலுகை கிடைத்துள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவில் பெட்ரோல் விலை 13.30 ரூபாய் குறைந்து 113.93 ரூபாயில் இருந்து 100.63 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேபோல் டீசல் விலை 19.47 ரூபாய் குறைந்து 104.50 ரூபாயில் இருந்து 85.03 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மத்திய அரசு பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாய் மட்டுமே குறைத்தது.
பிற மாநிலங்கள்
கர்நாடகாவை போலவே அசாம், திரிபுரா, மணிப்பூர், கர்நாடகா, கோவா, உத்தரப்பிரதேசம், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், பீகார், ஒடிசா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. மத்திய அரசைக் காட்டிலும் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் சுமையைக் குறைக்கத் தமிழ்நாடு விலையைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசம்
இதில் முக்கியமாகத் தேர்தல் எதிர்கொள்ளப்போகும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. கிட்டதட்ட இதேபோன்ற சலுகையை ஹரியானாவில் கொடுக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல்
சமீபத்தில் நடந்த 3 மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிரான போட்டியில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த நிலையிலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைத்தது. இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநில அரசுகளும் விலையைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மகிழ்ச்சி
இன்று பெட்ரோல், டிசல் விலையில் எவ்விதமான உயர்வும் இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் விரைவில் காய்கறி விலை மற்றும் உணவு பொருட்களின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல் விலை (NOV 05)
சென்னை - 101.40 ரூபாய், டெல்லி - 103.97 ரூபாய், கொல்கத்தா - 104.67 ரூபாய், மும்பை - 109.98 ரூபாய், பெங்களூர் - 100.58 ரூபாய், ஹைதராபாத் - 108.20 ரூபாய், கோழிக்கோடு - 104.46 ரூபாய், போபால் - 107.23 ரூபாய், இந்தூர்- 112.59 ரூபாய்.
டீசல் விலை (NOV 05)
சென்னை - 91.43 ரூபாய், டெல்லி - 86.67 ரூபாய், கொல்கத்தா - 89.79 ரூபாய், மும்பை - 94.14 ரூபாய், பெங்களூர் - 85.01 ரூபாய், ஹைதராபாத் - 94.62 ரூபாய், கோழிக்கோடு - 91.72 ரூபாய்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications