திருவனந்தபுரம்: பல்வேறு சமூக கட்டமைப்புகளையும் உடைத்து விட்டு கேரளாவில் அரசின் மதுபான விற்பனை கடைகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெண் ஊழியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. கேரள அரசின் மதுபானங்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மதுபான விற்பனை கடைகளில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பெண்களாக இருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலைமை இப்படி இருக்க வில்லை, அதற்கு முன்பு வரை மது விற்பனை கடைகளில் ஆண்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. எனவே பெண்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றம் அரசின் மது விற்பனை கடைகளில் பெண்களையும் பணிக்கு அமர்த்தலாம் என உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அடுத்து கேரள அரசின் மதுபானங்கள் விற்பனை நிறுவனம் பெண்களையும் பணிக்கு அமர்த்த தொடங்கியது. நாட்டிலேயே முதன்முறையாக பெண்கள் மதுக்கடைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டது இதுவே முதல் முறையாக இருந்தது. இந்த 10 ஆண்டுகளில் கேரள மது கடைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை அம்மாநில அரசின் மதுபான விற்பனை நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான ஹர்ஷிதா தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் மதுக்கடைகளில் பணியாற்றுவது பெண்களுக்கு சிரமமாக இருந்தது, ஆனால் பாதுகாப்பான பணி சூழல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு பெண்களும் தாங்களாக முன்வந்து இந்த பணிகளில் சேருகின்றனர். அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என ஹர்ஷிதா தெரிவிக்கிறார். வாடிக்கையாளர்கள் தவறாக நடந்து கொண்டால் உடனடியாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படுவதால் பெண்கள் இங்கே பாதுகாப்பாக உணர்கின்றனர் என்றும் அவர் கூறுகிறார்.
கேரளா அரசின் மதுபான நிறுவனத்தின் மேலாண் இயக்குனரில் தொடங்கி அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளை மேற்பார்வையிடும் உதவி பொது மேலாளர் உட்பட பல்வேறு உயர் பதவிகளிலும் பெண்களே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அது தவிர விற்பனையாளர்கள், சேமிப்புக் கிடங்கு நிர்வாகிகள் என்ற பணிகளுக்கும் பெண்களே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக தனியாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பெண்கள் வேலை செய்ய உகந்த இடம் அல்ல என கருதப்பட்ட இடங்கள் தான் மதுபான விற்பனை நிலையங்கள். ஆனால் அங்கேயே தற்போது 50 சதவீதம் பெண் ஊழியர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது கேரளா அரசு. தொடக்கத்தில் குடும்பத்தினர் இந்த வேலைக்கு அனுப்ப தயக்கம் காட்டினர், ஆனால் தற்போது குடும்பத்தினரே தைரியமாக அனுப்புகின்றனர் என பெண்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications