உங்கள் OTPயை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள், கால் / எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் மூலம் கூட ஒன் டைம் பாஸ்வேர்ட்-ஐ கேட்டு இணைய மோசடிகள் நடப்பது குறித்து அவ்வபோது சைபர் கிரைம் அதிகாரிகளால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகிறது.
ஆனால் டெல்லியில் ஒருவரின் வங்கி கணக்கின் OTP ஐப் பகிராமலேயே பணம் திருடப்பட்டு உள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒருவர் மிஸ்டு கால் மூலம் ரூ.50 லட்சத்தை இழந்துள்ளார்.
மோசடி செய்தவர்கள் OTP கேட்கப்படாமல் இந்த மோசடி செய்தது சைபர் கிரைம் அதிகாரிகளுக்கே பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. பணத்தை வீட்டில் வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று தான் வங்கியில் வைக்கிறோம். ஆனால் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கூட நூதன முறையில் மோசடி செய்து திருடினால் மக்கள் என்ன தான் செய்ய வேண்டும்.
ஷம்ஷேர் சிங்
நவம்பர் 13 அன்று இரவு 7 மணி முதல் 8:44 மணி வரை டெல்லியை சேர்ந்த ஷம்ஷேர் சிங் செல்போனில் பலமுறை பிளாங்க் மற்றும் மிஸ்டு கால் வந்துள்ளது. அவர் சில அழைப்புகளைப் புறக்கணித்த நிலையில் தொடர் அழைப்புகள் வந்த காரணத்தால் ஒரு அழைப்பை எடுத்தார் மறுபுறம் யாரும் பேசவில்லை.
வித்டிரா மெசேஜ்
அடுத்த சில நேரத்தில் ஷம்ஷேர் சிங் பணத்தை வித்டிரா செய்ததற்கான மெசேஜ்-கள் தனது வங்கி கணக்கில் இருந்து தொடர்ந்து பெற தொடங்கினார். RTGS மூலம், அதாவது உடனடி நிதி பரிமாற்றம் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளதை கண்டறிந்தார்.
RTGS பண பரிவர்த்தனை
மோசடி செய்தவர்கள் OTP (ஒரு முறை கடவுச்சொல்) குறியீடு இல்லாமலேயே RTGS பண பரிவர்த்தனைகளை செய்துள்ளதை ஷம்ஷேர் சிங் சைபர் கிரைம் மற்றும் பத்திரிக்கைகளுக்கு தெரிவித்தார். பொதுவாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை வித்டிரா செய்யும் போது கணக்கின் உரிமையாளரின் செயல்பாட்டை உறுதி செய்யவும், சரிபார்க்கவும் OTP மூலம் வங்கிகள் செய்யும்.
சைபர் கிரைம் பிரிவு
ஷம்ஷேர் சிங் -ன் புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். IFSO (Intelligence Fusion and Strategic Operations) பிரிவு அதாவது சைபர் கிரைம் பிரிவு, இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஷம்ஷேர் சிங் கணக்கை குறிவைத்து சுமார் 50 லட்சம் பணத்தை திருடியவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆன்லைன் பண மோசடிகள்
பொதுவாக ஆன்லைன் பண மோசடிகள் OTP அல்லது கார்டு நம்பரை கால் / எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் மூலம் பகிர்வதன் மூலம் நடக்கும். ஆனால் இந்த மோசடியாளர் OTP இல்லாமல் ஷம்ஷேர் சிங் கணக்கில் இருந்து பணத்தை திருடியுள்ளார்கள் என்றால் SIM Swap முறையை பயன்படுத்தியிருக்கலாம் என சைபர் கிரைம் அதிகாரிகள் நம்புகின்றனர்.
SIM Swap முறை
RTGS பரிமாற்றத்தைத் தொடங்கவும் OTP-ஐச் செயல்படுத்தவும் இந்த மோசடி கும்பல் SIM Swap முறையை பயன்படுத்தியிருக்கலாம். அதாவது ஒருவருடைய சிம் கார்ட்-ஐ Duplicate செய்து அதை ஒரே நேரத்தில் நிஜ உரிமையாளரின் அழைப்புகள், மெசேஜ்-களை பெற முடியும்.
OTP இல்லாமல் பணம் திருட்டு
இதன் அடிப்படையில் தான் ஷம்ஷேர் சிங் கணக்கில் அதிகப்படியான பணம் உள்ளதை தெரிந்துக்கொண்டு SIM Swap முறையில் OTP இல்லாமல் பணத்தை திருடியிருக்க முடியும் என கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications