ஓசூர்: ஸ்டீல் பேர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தங்களுடைய ஹெல்மெட் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது.
ஸ்டீல் பேர்டு நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
ஹீரோ, யமஹா, ஹோண்டா, ராயல் என்ஃபீல்டு, சுசுகி, ஓலா, டிவிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் இந்த நிறுவனம் ஹெல்மெட் தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வகையில் ஸ்டீல் பேர்டு நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மூலதன செலவினமாக 100 கோடி ரூபாயை இந்த நிறுவனம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. மொத்தமாக 250 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக ஸ்டீல் பேர்டு நிறுவனம் கூறியுள்ளது. முதல் கட்டமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ஹெல்மெட்டுகளை தயாரிக்கும் திறன் கொண்டதாக இந்த ஆலை அமைக்கப்படும் என்றும் பின்னர் இது மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் ஸ்டீல் பேர்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜீவ் கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஓசூர் பகுதியில் சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆறு இடங்களிலும் நொய்டாவில் மூன்று இடங்களிலும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தற்போது செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் புதிதாக சைக்கிள்களுக்கான ஹெல்மெட் உற்பத்தி ஆலையை நிறுவ இருப்பதாக ஸ்டீல் பேர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டீல் பேர்டு நிறுவனம் இந்தியாவில் பிராண்டட் ஹெல்மெட் சந்தையில் 40 சதவீத பங்கினை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ஓராண்டில் 100 மில்லியன் ஹெல்மெட்டுகள் தேவைப்படும் நிலையில் 30 மில்லியன் என்ற அளவில் மட்டுமே பிராண்டன் ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன, இந்த இடைவெளியை போக்கும் விதமாக புதிதாக ஹெல்மெட் உற்பத்தி ஆலைகளை நிறுவுகிறோம் என தெரிவிக்கிறார்.
தற்போது பல்வேறு நகரங்களிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருப்பதால் புதிதாக ஹெல்மெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறுகிறார்.
2030 ஆம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தின் வருமானம் 2500 கோடி எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஸ்டீல் பேர்டு நிறுவனம் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 8 மில்லியன் ஹெல்மெட்டுகளை தயாரித்துள்ளது, 2024ஆம் ஆண்டில் அது 10 மில்லியனாக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Story Written by: Devika
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications