இந்திய தொழில் துறையின் வளர்ச்சியிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியத் தூண்களாகக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக இருந்து வரும் டாடா குழுமம், தற்போது டிஜிட்டல் யுகத்தில் தனது காலடி தடத்தை அழுத்தமாகப் பதித்துள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் ஈடுபடப் பலரும் முயற்சி செய்து தோல்வி அடைந்த நிலையில், தைவான் PSMC உடன் கூட்டணி சேர்ந்து குஜராத்தில் 91000 கோடி ரூபாயில் புதிய செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தளத்தை அமைக்க உள்ளது.

இதேபோன்ற சம்பவம், கிட்டதட்ட 120 வருடங்களுக்கு முன்பு டாடா குழுமத்தில் நடந்தது உங்களுக்குத் தெரியுமா..? டாடா குழுமத்தின் செமிகண்டக்டர் துறையின் நுழைவு, இந்தியாவின் 4வது தொழிற்துறை புரட்சிக்கு வழிவகுத்துள்ளது.
குஜராத், அசாம் சிப் ஃபேப்ரிகேஷன் மற்றும் பேகேஜ் யூனிட் மூலம், டாடா குழுமமும் இந்திய பொருளாதாரமும் தனது நீண்ட காலப் பயணத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. டாடா நிறுவனம் இந்தியாவில் எஃகு உற்பத்தியைத் தொடங்கிய காலமும், தற்போது செமிகண்டக்டர் சிப் உற்பத்தியும் அதிகளவில் ஒத்துப்போகிறது.
1900 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், இந்தியாவின் முதல் தொழில் துறை புரட்சி பெற்ற காலமது, டாடா குழுமம் ஸ்டீல் உற்பத்தி என்ற துணிச்சலான முயற்சியில் இறங்கியது, இன்றளவும் பல வரலாற்று பொருளாதார வல்லனர்கள் பாராட்டி வருகின்றனர்.
அப்போதைய தொழிலதிபர்களில் ஒருவராகவும், டாடா குழுமத்தை நிறுவியவராகவும் இருந்த ஜம்செட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடா, "இந்தியாவில், இந்திய மக்களுக்காக" என்ற ஸ்வதேசி-யில் உறுதியான கொள்கையுடன் செயல்பட்டார். இதன் விளைவாகவே பல துறையில் இறங்கி இன்று மாபெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது டாடா குழுமம்.
ஆனால், பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் போது இந்திய தொழில்முனைவோர் எதிர்கொண்ட இன்னல்களைக் கடந்து இந்தக் கனவை நனவாக்குவது சாதாரண விஷயமில்லை என்பதையும் மறக்க கூடாது.
ஜம்செட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடா, இங்கிலாந்தின் மான்செஸ்டருக்குச் சென்றபோது, இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் துவங்கும் ஐடியாவை பெற்றார். இதைத் தொடர்ந்து 1882 ஆம் ஆண்டில், ஜே.என்.டாடா, ஜெர்மன் புவியியலாளர் ரிட்டர் வான் ஸ்வார்ஸின் அறிக்கையைப் படித்தார், அந்த அறிக்கையில் லோஹாரா-வில் அதிகப்படியான இரும்புத் தாது இருப்பது தெரிந்தது.
ஆனால் பல்வேறு காரணத்திற்காக அப்போது ஸ்டீல் நிறுவனத்தை உருவாக்கும் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் டாடா நிறுவனம் எஃகு ஆலையைக் கொண்டுவருவதில் விடாமல் முயற்சி செய்தது. இந்த நிலையில் ஜம்செட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடா மறைந்த நிலையில் மகன் டோராப்ஜி டாடா இந்தக் கனவை நிஜமாக்கினார். ஆகஸ்ட் 26, 1907 இல் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை (TISCO) நிறுவியது, தற்போது இது டாடா ஸ்டீல் என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் இந்திய வேளாண்மைத் துறையின் முன்னேற்றத்திற்கு எஃகு அவசியமாக இருந்தது. ஆனால் இந்தத் தொழிற்சாலை தான் நாட்டின் முதல் தொழிற்துறை புரட்சிக்கு வித்திட்டு வேகமாக வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வந்த நிறுவனம்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பொதுவாக இந்தியாவில் இருந்து தாதுக்கள் இங்கிலாந்துக்குச் சென்று, பொருளாகத் தான் இந்தியாவில் விற்கப்படும். டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் தான் முதல் முறையாக இந்தியாவின் இருப்பு தாது, இந்தியாவிலேயே பொருளாக மாற உதவியது.
ஸ்டீல் தான் அனைத்து விதமாகக் கருவிகள், உபகரணங்கள் மற்றும் ரயில் போன்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அடிப்படையான உலோகமாகும். இதனாலேயே தொடக்கக் காலத் தொழிற்புரட்சியில் எஃகு அடித்தளமாக இருந்தது.
இதேபோல இன்றைய நவீன தொழில்நுட்ப பொருளாதாரத்தில் செமிகண்டக்டர் சிப் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படை கற்கள் ஆகும். இன்று, டாடா குழுமம் குஜராத், அசாம் சிப் தொழிற்சாலை மூலம் மீண்டும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு உள்ளது. இந்தியாவின் Fourth industrial Revolution-ல் டாடாவின் குஜராத், அசாம் சிப் தொழிற்சாலை முக்கியப் பங்காற்றும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications