இன்றே கடைசி நாள்.. ஆதார் - பான் எண் ஆன்லைனில் இணைப்பது எப்படி..? வெறும் 5 நிமிடம் போது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசின் அறிவிப்பின் படி வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களது ஆதார் எண் உடன் இணைக்கவேண்டும், இல்லையெனில் உங்களது பான் எண் அல்லது பான் கார்டு செல்லாதது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

இந்நிலையில் மார்ச் 31, 2021க்குள் ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்காதவர்களுக்குத் தாமதம் கட்டணமாக 1000 ரூபாயை அபராதமாக விதிக்க மத்திய அரசு நிதியியல் கொள்கை 2021 அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

இன்றே கடைசி நாள்..  ஆதார் - பான் எண் ஆன்லைனில் இணைப்பது எப்படி..? வெறும் 5 நிமிடம் போது..!

இதுமட்டும் அல்லாமல் புதிய பான் கார்டு வாங்கவும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ள காரணத்தால் தகவல்களை இணைப்பதில் இருந்து தப்பிக்க முடியாது. இந்நிலையில் ஆன்லைன் இணைப்பதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

ஆதார் - பான் எண்-ஐ வருமான வரித் தளம் மூலம் இணைக்கலாம்.

1. வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home

2. இடது புறம் இருக்கும் Quick Links பட்டியலில் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்

3. குறித்த இணையப் பக்கத்தில் உங்கள் பான் எண், ஆதார் எண், ஆதார் அட்டையில் இருக்கும் பெயர் ஆகியவற்றை நிரப்புங்கள்

4. உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் இருந்தால் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.

5. UIDAI அமைப்பிடம் உங்களது ஆதார் தகவல்களைச் சரிபார்க்க ஒப்புதல் அளிக்கச் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.

6. Captcha Code-ஐ பதிவு செய்து Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான் மொத்த வேலையும் 5 நிமிடத்தில் முடித்துவிடலாம்.

ஆதார் - பான் எண்-ஐ எஸ்எம்எஸ் வாயிலாகவும் இணைக்கலாம்.

ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு UIDPAN என்ற பார்மெட்டில் எஸ்எம்எஸ் அனுப்பினால் போதுமானது. உதாரணமாக UIDPAN 123456789000 EPOPE1234E

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Step By Step guide to link PAN - Aadhaar online

Step By Step guide to link PAN - Aadhaar online
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X