உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே 1 கோடிக்கும் அதிகமான மக்கள் கும்பமேளாவில் கலந்துகொண்டு சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளா நிகழ்வை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருந்து பலரும் இந்த புனிதமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ் மகாகும்பமேளாவில் கலந்து கொண்டிருக்கிறார்.

இதற்காக அவர் சில தினங்களுக்கு முன்பு இந்தியா வருகை தந்தார். 61 வயதாகி இருக்கும் அவர் நிரஞ்சனி அகாராவின் மகா மண்டலேஸ்வர சுவாமி கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் முகாமில் 17 நாட்கள் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய இந்த பயணத்தின் ஒரு பகுதியாக திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடுவார் என்றும் கல்பவாசம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முதல் நாளில் பாவெல் ஜாப்ஸ் திட்டமிட்டப்படி புனித சடங்குகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இரண்டாம் நாளில் அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக என்டிடிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மகா கும்பமேளா நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அவருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் அவர் கங்கை நதியில் புனித நீராடும் சடங்கில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுவாமி கைலாசானந்த கிரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ,பாவெல் ஜாப்ஸ் சங்கமத்தில் புனித நீராடும் சடங்கில் பங்கேற்பார் என்றும் இதனைத் தொடர்ந்து முகாமில் சென்று அவர் ஓய்வு எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு சில அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பு பாவெல் ஜாப்ஸ் இவ்வளவு கூட்டம் நிறைந்த பகுதியில் இருந்தது கிடையாது எனக் கூறியுள்ளார்.
பாவெல் ஜாப்ஸ் மிகவும் எளிமையானவராக இருக்கிறார் , பூஜை நேரத்தில் எங்களுடன் தங்கி இருப்பார் என அவர் கூறியுள்ளார். முன்னதாக மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பாவெல் ஜாப்ஸ் திங்களன்று பிரயாக்ராஜ் வருகை தந்தார். அங்கே அவருக்கு சுவாமி கைலாசானந்த கிரி "கமலா" என பெயர் சூட்டினார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா நிகழ்வு நடப்பாண்டு கூடுதல் சிறப்பு கொண்டது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். இது ஆன்மாவை தூய்மைப்படுத்துவதாக நம்பிக்கை இருக்கிறது. 45 நாட்களுக்கு நடக்கும் இந்த நிகழ்வில் 45 கோடிக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications