இப்போ 'இந்த' துறைக்கு நல்ல காலம்... தாராளமாக பங்குகளை வாங்கி போடுங்க..!

இந்திய பங்குச் சந்தைகளின் தற்போதைய போக்கு கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த சூழ்நிலையில், எந்த துறையை சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்வது நல்ல ஆதாயம் அளிக்கும் என்று முதலீட்டாளர்கள் தீவிரமாக தேடுகிறார்கள். ஆனால் ரொம்ப யோசிக்க வேண்டிய தேவையே இல்லை, தாராளமாக ஹோட்டல் துறையை சேர்ந்த நிறுவன பங்குகள் தேர்வு செய்து முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹோட்டல் பங்குகளுக்கு நல்ல காலம் தொடருகிறது. ஐபிஎல் மற்றும் ஆசிய கோப்பை போன்ற கிரிக்கெட் நிகழ்வுகளை தவிர்த்து, ரூபாய் மதிப்பு சரிவு சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும், உள்நாட்டு ஓய்வு பயணங்கள் மற்றும் அதிகரித்து வரும் கூட்டங்கள்,மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் போன்றவை ஹோட்டல் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இப்போ 'இந்த' துறைக்கு நல்ல காலம்... தாராளமாக பங்குகளை வாங்கி போடுங்க..!

கோல்ட்பிளேவின் இந்திய சுற்றுப்பயணம் மற்றும் கும்பமேளா போன்றவற்றால் 2025 ஹோட்டல் நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஐடிபிஐ கேபிட்டல், ஆன்டிக் ஸ்டாக் புரோக்கிங், மோதிலால் ஓஸ்வால் மற்றும் ஜேஎம் ஃபைனான்சியல் போன்ற தரகு நிறுவனங்களின் அறிக்கையின்படி, கார்ப்பரேட் விலைகளின் அதிகரிப்பு, சராசரி அறை கட்டணத்தில் (ஏஆர்ஆர்) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

கடன் மதிப்பீடு தரநிர்ணய நிறுவனமான இக்ரா, நடப்பு 2024-25ம் நிதியாண்டில் ஹோட்டல் துறை வளர்ச்சி 7 முதல் 9 சதவீதம் என்ற அளவில் இருக்கும். அடுத்த 2025-26ம் நிதியாண்டில் ஹோட்டல் துறை 6 முதல் 8 சதவீதம் வளர்ச்சி காணும் என்று கணித்துள்ளது.

பங்குச் சந்தைகளின் சரிவுக்கு பிறகு, பல முன்னணி ஹோட்டல் நிறுவனங்களின் மதிப்பீடுகள் மேம்பட்டுள்ளன. 2025ம் ஆண்டில் இதுவரை முன்னணி 13 ஹோட்டல் நிறுவனங்களில் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ளன. எட்டு நிறுவன பங்குகளின் விலை 15 சதவீத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளன. முன்னணி 3 ஹோட்டல் நிறுவனங்கள் குறித்து நிபுணர்களின் மதிப்பீட்டை பார்ப்போம்.

சாலட் ஹோட்டல்ஸ்: கடந்த டிசம்பர் காலாண்டில் சாலட் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் வருவாய் 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.2,000 கோடியை மூலதன செலவினத்தில் முதலீடு செய்ய உள்ளது. 2026ம் ஆண்டில் கிடைக்கும் அறைக்கான வருவாயில் (RevPAR) இரட்டை இலக்க வளர்ச்சியை இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. Antique ஸ்டாக் புரோக்கிங் நிறுவனம் கூறுகையில், வலுவான செயல்பாட்டு செயல்திறனை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5.65 சதவீதம் உயர்ந்து ரூ.863.80ஆக இருந்தது.

லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ்: கடந்த டிசம்பர் காலாண்டில் லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் வருவாய் 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பிரீமியமாக்கல் ஏஆர்ஆர் மற்றும் பணப்புழக்கங்களை மேம்படுத்த உதவும் என்பதால் நிறுவனத்தின் கடன் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கூறுகையில், லெமன் ட்ரீ ஹோட்டல்ஸின் வளர்ச்சி வேகம் ஆரோக்கியமாக இருக்கும். அவுரிகா ஹோட்டலை தொடங்குவது வளர்ச்சிக்கு உதவும் என்று தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.29 சதவீதம் உயர்ந்து ரூ.139.45ஆக இருந்தது.

இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி: கடந்த டிசம்பர் காலாண்டில் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி நிறுவனத்தின் வருவாய் 29 சதவீதம் வளர்ச்சியுடன் ஆரோக்கியமான செயல்திறனுடன் உள்ளது. இந்நிறுவனம் 2025-26ம் நிதியாண்டில் 30 ஹோட்டல்களை திறக்க உள்ளது. பெரிய பண இருப்புடன் வலுவான இருப்புநிலை குறிப்பை கொண்டுள்ளது. அம்பிட் கேபிட்டல் நிறுவனம் கூறுகையில், அதிகரித்த உள்நாட்டு பயணம் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகையால் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி பயனடையும் என்று தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.30 சதவீதம் உயர்ந்து ரூ.843.00ஆக இருந்தது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+