அமெரிக்கா தொடர்ந்து தென் கொரியாவில் ரத்தக்களறி.. ட்ரிகரான சர்கியூட் பிரேக்கர்..!!

அமெரிக்கப் பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகம் 2020க்கு பின்பு மோசமான சரிவை சந்தித்து ஒரே நாளில் 2.9 டிரில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பை இழக்கும் அளவுக்கு மோமசான நாளாக அமைந்தது.

அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணம் ஜனநாயக கட்சியினர் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடுவார்கள் என்ற கணிப்பின் அடிப்படையில் நேற்றைய வர்த்தகத்தில் ஏஐ, டேட்டா சென்டர், கிளவுட் சேவைகள், நியோ கிளவுட், சிப் தயாரிப்பு, சிப் டிசைன் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க பங்குச்சந்தை தாண்டி அதிக லாபம் அடைந்த சந்தையாக விளங்கும் தென் கொரிய சந்தையில் செயின் ரியாக்ஷனாக மோசமான சரிவுக்கு சென்றுள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து தென் கொரியாவில் ரத்தக்களறி.. ட்ரிகரான சர்கியூட் பிரேக்கர்..!!

இன்று காலை வர்த்தகம் துவங்கும்போதே மோசமான சரிவுடன் துவங்கிய தென் கொரிய பங்குச்சந்தை காஸ்பி குறியீடு 8 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், பெரும் சரிவை தடுக்க சர்கியூட் பிரேக்கர் டிரிக்கர் ஆனது. இதன் மூலம் தற்போது 5.8 சதவீத சரிவில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்கச் சந்தையில் நடந்தது போலவே தென் கொரிய சந்தையிலும் சிப், டெக், ஏஐ பங்குகள் அதிகளவில் சரிந்து 5000 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்துள்ளது, இதன் மூலம் 9 மாத சரிவை தொட்டு உள்ளது. காஸ்பி குறியீட்டின் 8.8 சதவீத சரிந்து 4,911.28 புள்ளிகளை எட்டியதை தொடர்ந்து கொரிய எக்ஸ்சேஞ்ச் அமைப்பு 9.03 மணிக்கு 20 நிமிட சர்கியூட் பிரேக்கர் ட்ரிகர் செய்து மொத்த பங்குச்சந்தை வர்த்தகத்தையும் முடங்கியது.

Also Read

இன்றைய வர்த்தகத்தில் தென் கொரியாவின் சிப் தயாரிப்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் 10 சதவீதமும், SK Hynix 13 சதவீதமும், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 4 சதவீதமும், ஹூண்டாய் மோட்டார்ஸ் 6.9 சதவீதமும், கியா கார்ப் 4 சதவீதமும் சரிந்துள்ளது.

அமெரிக்கா, தென் கொரியா போலவே ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வேகமாக வளர்ச்சி அடைந்த சந்தைகளில் மற்றொன்று தைவான் நாட்டின் டாய்எக்ஸ் இந்த வருடம் மட்டும் சுமார் 20000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து தைவான் முதலீட்டாளர்களை கோடீஸ்வரனாக்கியது.

இந்த நிலையில் இன்று 8 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்து 37,837 புள்ளிகள் வரையில் சரிந்தது. இந்த மோசமான சரிவுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது தைவான் நாட்டின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான TSMC 7 சதவீதம் வரையில் சரிந்தது மூலம் மொத்த தைவான் பங்குச்சந்தையும் சரிவு பாதைக்குச் சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+