மும்பை பங்கு சந்தை விடுமுறை காலண்டரின்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதியான வியாழன் அன்று வர்த்தகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, ஈக்விட்டி, டெரிவேட்டிவ் மற்றும் SLB செக்மென்ட் உட்பட அனைத்து பிரிவுகளும் நாளை மூடப்படும். இதற்கிடையில், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் சந்தையும் (MCX) காலை மற்றும் மாலை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டில், சுதந்திர தினம் தவிர, செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று வரும் இத்-இ-மிலாத், அக்டோபர் 2-ஆம் தேதி அன்று மகாத்மா காந்தி ஜெயந்தி, நவம்பர் 1-ஆம் தேதி தீபாவளி, நவம்பர் 15-ஆம் தேதி வரும் குருநானக் ஜெயந்தி, மற்றும் டிசம்பர் 25-ஆம் தேதி அன்று வரும் கிறிஸ்துமஸ் ஆகியவற்றிற்கும் சந்தைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதற்கான தனி அறிக்கை முன்கூட்டியே வெளியிடப்படும்.

புதன்கிழமை வர்த்தக முடிவில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சிறிய அளவில் உயர்ந்து காணப்பட்டன. இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 149.85 புள்ளிகள் உயர்ந்து 79,105.88 புள்ளிகளை தொட்டு உள்ளது, நிஃப்டி குறியீடு 4.75 புள்ளிகள் உயர்ந்து 24,143.75 புள்ளிகளை தொட்டு உள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தி பொருட்களின் விலை குறியீடு குறைந்து வருவதாக நேற்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால், அமெரிக்க பங்குச் சந்தை குறியீடுகள் நேற்றில் உயர்வில் முடிந்த காரணத்தால், இன்று ஆசிய பங்குச்சந்தைகளும் சிறிய அளவிலான உயர்வுடன் காணப்பட்டது. தற்போதைய கணிப்புகளின் செப்டம்பர் மாதம் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைகக்கும் இது அமெரிக்க சந்தை உட்பட சர்வதேச சந்தைக்கும் சாதகமாக இருக்கும் , இதுவே செப்டம்பர் மாதமும் வட்டி விகிதத்தை குறைக்காவிடில் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications