இந்தியா தன்னுடைய 78வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் பங்குச்சந்தை நிபுணர்கள் இந்த சுதந்திர தினத்தை ஒட்டி எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது குறித்த தங்களுடைய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளனர்.
ஆர்த்தி டிரக்ஸ் (Aarti Drugs ):ஆர்த்தி டிரக்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை மருந்து துறையில் நல்ல வருவாயை பெறக்கூடிய நிறுவனமாக இருக்கிறது என கூறும் பங்குச்சந்தை நிபுணர்கள், இந்த நிறுவனம் தற்போது பல்வேறு சர்வதேச ஆர்டர்களை கொண்டிருப்பதாகவும் புதுப்புது தயாரிப்புகளை அறிமுகம் செய்ய வைப்பதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக இதன் பங்கு மதிப்பு கணிசமான அளவு உயரும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அந்த வகையில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது 496 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் ஆகி வரும் நிலையில் அடுத்த ஓராண்டில் இதன் மதிப்பு 600 ரூபாயை எட்ட கூடும் என கூறுகின்றனர்.

NOCIL: இந்தியாவில் ரப்பர் கெமிக்கல் சந்தையில் முன்னணி நிறுவனமாக என்ஓசிஐஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன பங்கு தற்போது 279 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வரும் நிலையில் இதனை இதன் மதிப்பு 350 ரூபாய் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். ஏனெனில் இந்த நிறுவனம் தற்போது கடன் இல்லாத நிறுவனமாக இருக்கிறது என்றும் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் பாசிட்டிவாக இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
ஃபெடரல் வங்கி: தற்போது 204 ரூபாய் என்ற அளவில் ஃபெடரல் வங்கியின் ஒரு பங்கின் மதிப்பு வர்த்தகமாகி வருகிறது. கூடிய விரைவில் இதன் மதிப்பு 235 ரூபாயை எட்டும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். வங்கி சார்ந்த நிறுவன பங்குகளிலேயே ஃபெடரல் வங்கி கடந்த ஓராண்டில் மட்டும் 52 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. வரும் நாட்களிலும் இந்த பங்கின் மதிப்பு வளர்ச்சி பாதையிலேயே இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
வோல்டாஸ்: இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது 1550 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. கூடிய விரைவில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1800 ரூபாய் வரை எட்டும் என தெரிவிக்கின்றனர். எனவே இந்த நிறுவனத்தின் பங்கினை முதலீட்டாளர்கள் தவறாமல் வாங்கலாம் என்றும் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை மட்டும் 45 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் : இந்நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 4,460 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இதன் மதிப்பு சுமார் 15 லிருந்து 20% வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
எல்&டி: தற்போது இதன் ஒரு பங்கின் மதிப்பு 3,543 ஆகும். கூடிய விரைவில் இந்த மதிப்பு 15% வரை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: தற்போது இதன் ஒரு பங்கின் மதிப்பு 803 ரூபாய் ஆகும். ஓராண்டு காலத்தில் இதன் மதிப்பு 20% வரை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பாரத் டைனமிக்ஸ்: தற்போது இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1320 ரூபாய் என வர்த்தகமாகி வருகிறது. இதன் மதிப்பு 1500 வரை எட்டலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிளாட்டினம் இண்டஸ்ட்ரீஸ் : இந்த நிறுவனத்தை பொருத்தவரை கூடிய விரைவில் இதன் மதிப்பு 4400-யை கடக்கும் என முதலீட்டு துறை நிபுணர்கள் கணிக்கின்றனர். ஏனெனில் இந்த நிறுவனம் தற்போது லீட் இல்லாத தயாரிப்புகள் மற்றும் பிவிசி பைப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. எனவே அடுத்த ஓராண்டில் இந்த நிறுவனம் கணிசமான வளர்ச்சியை எட்டும் என தெரிவிக்கின்றனர்.
சுயோக் டெலிமெடிக்ஸ் நிறுவனம்: தற்போது இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1471 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனம் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி தரும் நிறுவனமாக இருக்கிறது. கூடிய விரைவில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1800 ரூபாய் வரை உயரும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications