தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு மோசடிகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் பலவிதமான மோசடிகள் நடைபெறுகிறது. அதில் வாட்ஸ்அப் மோசடியும் ஒன்று. வாட்ஸ்ஆப் மோசடியில் உங்களுடைய விவரங்கள் திருடப்படலாம். மேலும் இந்த மோசடி உலகம் முழுவதும் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக வாட்ஸ்ஆப் மூலம் பல மோசடிகள் நடந்துள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த மோசடியில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வாட்ஸ் அப் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள 5 வழிகள்:
1) தெரியாத நபர்களைக் கொண்ட வாட்ஸ்ஆப் குழுவில் நீங்கள் சேர்க்கப்பட்டு, யாராவது உங்களை முதலீடு செய்ய, நிதி ஆலோசனையை பெற அல்லது சமூக நோக்கத்திற்காக பணம் செலுத்துமாறு வற்புறுத்தினால், உடனடியாக அந்த குழுவில் இருந்து வெளியேறி அதனை பிளாக் செய்யவும்.

2) உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்டு, OTP போன்ற தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப் மூலம் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். இது போன்ற தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
3) வாட்ஸ்அப்-பில் வரும் செய்திகள் அல்லது ,மெயில் மூலம் பெறப்படும் சந்தேகக்திற்கிடமான லிங்குகளைக் கிளிக் செய்ய வேண்டாம். இதுபோன்ற லிங்குகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாம்.
4) ஸ்ட்ராங் பாஸ்வேர்டைப் பயன்படுத்துங்கள். மேலும் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவதன் மூலம் உங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்படுவதில் இருந்து தவிர்க்கலாம்.
5) இதுபோன்ற மோசடிகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு செய்திகளில் வரும் மோசடிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அந்த மோசடிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று நீங்கள் தெரிந்து கொண்டால், அதில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.
மேலும் பலவிதமான முறைகளை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். சில சமயம் மோசடி செய்பவர்கள், உங்களுக்கு நேரடியாக வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்யலாம். அவர்கள் பயனர்களின் ஆசை, பயம், மற்றும் ஆர்வங்களைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். உங்கள் வாட்ஸ்ஆப்-பிற்கு ஒரு லிங்கை அனுப்பி, அதன் உள்ளே சென்று உங்களுடைய மொபைல் நம்பரை பதிவு செய்தால், உங்களுக்கு கேஷ்பேக் வழங்கப்படும் என்று கூறுவார்கள்.
இது போன்ற நேரங்களிலும் உஷாராக இருப்பது முக்கியம். நிதி இழப்பு அபாயங்கள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து நம்முடைய தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். ஒரு நாளைக்கு எண்ணற்ற வழக்குகள் மோசடி சம்பவங்களால் பதிவு செய்யப்படுகின்றன. சமீபத்தில் வந்த ஒரு செய்தியில் கூட, OTP இல்லாமலும் உங்களுடைய தகவல்கள் திருடப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. எனவே பாதுகாப்பை உறுதி செய்து உங்களுடைய அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தவும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications