ஈரான் போர் தான் உலகம் முழுவதுமே பேசு பொருளாக இருந்து வருகிறது. ஏனெனில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையிலான ஒரு மோதல் என்பதை கடந்து ஈரான் போர் உலகெங்கிலும் இருக்கக்கூடிய மக்களை நேரடியாக பாதிப்படைய வைத்திருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கும் அத்தியாவசிய பொருட்களான கேஸ், பெட்ரோல், டீசல், உரங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகி இருக்கின்றன.
ஈரானில் போர் தொடங்கி மூன்றாவது வரமாக நடைபெற்று வருகிறது இதுவரை போர் நிறுத்தத்திற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்து வருகிறார்கள். டிரம்ப் விரைவில் போர் முடியும் என கூறுகிறார். ஆனால் உறுதியாக இத்தனை நாட்களில் முடிந்துவிடும், இது நடந்தால் முடிந்துவிடும் என அவர் கூறவே இல்லை. போர் தொடங்கி ஒரு இலக்கே இல்லாமல் நீடிப்பதாகவே தெரிகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதோடு போரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை, பெரிய ஆட்சி மாற்றம் நிகழும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறுவதாக தெரியவில்லை. ஏனெனில் பெரும்பாலான மக்களின் ஆதரவு தற்போதைய அரசுக்கு இருப்பதாகவே தெரிகிறது.
அப்படி என்றால் எது நடந்தால் டிரம்ப் இந்த போரை கைவிடுவார் என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் தான் ஈரான் போரில் டிரம்பின் கணக்கே வேறு என்கிறார் உலகின் முன்னணி முதலீட்டு நிபுணரும் பிரிட்ஜ் வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரே டேலியோ. ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கு என்ன என்பது குறித்த ஒரு தெளிவான பார்வையை முன் வைத்திருக்கிறார்.

உலகிலேயே மிக முக்கியமான ஒரு சரக்கு போக்குவரத்து வழித்தடமாக ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. ஈரான் தான் ஹார்முஸ் ஜலசந்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எப்போது போர் நடந்தாலும் அல்லது போர் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் ஈரான் முதலில் கை வைப்பது ஹார்முஸ் ஜலசந்தியில் தான். இந்த ஹார்மோன் ஜலசந்தி மூடப்பட்டு விட்டதால் தான் பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் கூட சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது தான் முக்கிய காரணம்.

இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் இலங்கையில் எல்லாம் நிலைமை இன்னும் மோசம். இந்த ஹார்முஸ் ஜலசந்தி யார் வசம் செல்கிறது என்பதை பொறுத்துதான் ஈரான் போர் முடிவுக்கு வரும் என ரே டேலியோ கூறுகிறார். இது தொடர்பாக விரிவான கட்டுரை எழுதி இருக்கும் அவர் ஹார்முஸ் ஜலசந்தி குறித்த எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டாமல் அமெரிக்கா போரை நிறுத்திக் கொண்டால் இந்த போரில் அமெரிக்கா தோற்றதாகவும் ஈரான் வெற்றி பெற்றதாகவும் தான் அமையும் எனக் குறிப்பிடுகிறார்.
மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு ஈரான் வசமே செல்கிறது என்றால் அமெரிக்கா இவ்வளவு கோடிகளை செலவு செய்து தாக்குதல் நடத்தி என்ன பிரயோஜனம் என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது ஹார்முஸ் ஜலசந்திதான் தீர்மானிக்க போகிறது என குறிப்பிடுகிறார். அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை பெறவில்லை என்றால் உலக அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கமே ஆட்ட கண்டுவிடும் என கூறுகிறார்.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திற்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை என்றால் இந்த பிராந்தியத்தில் இருக்கக்கூடிய அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என சுட்டிக்காட்டுகிறார் . இதனால் தான் டிரம்ப் நட்பு நாடுகள் போர் கப்பலை அனுப்பி ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் என சுட்டிக்காட்டுகிறார்.
ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு அமெரிக்கா வசம் வந்தால் மட்டுமே இந்த போரில் டிரம்ப் வெற்றி பெற்றதாக இருக்கும் இல்லை என்றால் டிரம்புக்கு இது பெரிய தோல்விதான் என கூறி இருக்கிறார். 1956 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு ஏற்பட்ட சூயஸ் கால்வாய் நெருக்கடியை போன்றது இது என குறிப்பிடும் அவர் பேரரசுகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் போக்கு ஏறக்குறைய எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது என சுட்டிக்காட்டுகிறார்.
வெற்றியாளர்களையும் தோல்வியாளர்களையும் தீர்மானிக்கும் இறுதிப் போர் வரலாற்றை மறுவடிமைப்பு செய்து புவிசார் அரசியல் அதிகாரத்தை மாற்றும் , யார் வெற்றியாளரோ அவரை நோக்கி தான் அனைத்து நாடுகளும், நிதியும் படையெடுக்கும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில் இந்த போரில் அமெரிக்கா முழுமையாக வெல்ல வேண்டும் என்றால் ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு ஈரான் வசம் செல்லக்கூடாது என்கிறார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இனி புதன்கிழமையும் லீவு; 15 லிட்டருக்கு மேல் பெட்ரோல் கிடைக்காது: ஈரான் போரால் ஸ்தம்பித்து போன இலங்கை

கனடா, கிரீன்லாந்து வேலைக்கு ஆகல.. இப்போ வெனிசுலா-வை இழக்கும் டிரம்ப்.. அதென்ன #51..?!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? – அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

சிலிண்டர் தட்டுப்பாட்டில் சிக்காம இருக்கனுமா? உங்க வீட்டு கேஸ் அடுப்ப இப்படி யூஸ் பண்ணுங்க!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!



Click it and Unblock the Notifications

