அமெரிக்கா - ஈரான் போட்ட ரகசிய டீல்! பெட்ரோல் விலை மீண்டும் ஏறப்போகிறதா? உண்மையில் என்ன நடந்தது?

சமீபகாலமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் குறித்து பலருக்கும் தெரியும். இந்த போர் பதற்றத்தின் காரணமாக ஈரான் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்ததாக செய்திகள் பரவியது. இந்த வழித்தடம் மிகவும் முக்கியமான வழித்தடம். ஏனென்றால் உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றில் ஐந்தில் ஒரு பங்கு.. இந்த ஒரு வழியாகத்தான் பிற நாடுகளுக்கு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான வழித்தடம் மூடப்பட்டால் தொடர்ந்து அங்கிருந்து வரும் பொருட்களின் விலை அதிகரிக்கும்.

ஈரான் இந்த வழித்தடத்தை மூடியதாக வெளியான செய்தியால் உலக நாடுகள் பதறிப் போயின. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி தான் என்று அதிகாரப்பூர்வமாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இந்தச் செய்தி உண்மையிலேயே உலக நாடுகளை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. ஏனெனில் இந்த வழித்தடம் மூடப்பட்டால் கச்சா எண்ணெயின் வரத்து குறையும். இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருளின் விலை அதிகரிக்கும். உலக நாடுகளுக்கு மட்டுமின்றி இந்த செய்தி வெளியானதிலிருந்து சாமானியர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதற்கு முன்னர் உண்மையிலேயே ஈரான் இந்த வழித்தடத்தை மூடி தான் வைத்திருந்தது. ஆனால் தற்போது பரவி வரும் செய்தி உண்மை இல்லை என்று ஈரான் அரசுக்கு சொந்தமான பிரஸ் டிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து வழக்கம் போல நடைபெற்று வருவதாக அந்நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா - ஈரான் போட்ட ரகசிய டீல்! பெட்ரோல் விலை மீண்டும் ஏறப்போகிறதா? உண்மையில் என்ன நடந்தது?

இந்த முடிவுக்கு முக்கிய காரணம் ஜூன் 18-ஆம் தேதி இன்று அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் ஹார்முஸ் வழித்தடம் வழியாக பாதுகாப்பான போக்குவரத்தை கொண்டு வருவதற்காக ஈரான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இஸ்மாயில் கூறியுள்ளார். அமைதி ஒப்பந்தம் போடப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கூறி, ஈரான் இஸ்லாமிய காவற்படைக்கு ஹார்முஸ் ஜலசந்தியை மூடுமாறு உத்தரவிட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்று ஈரான் மறுத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் டிஜிட்டல் முறையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் ஒப்பந்தத்தில் ஹார்மோஸ் வழித்தடத்தை பயன்படுத்துவது தொடர்பான புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான தேதி முதல் 60 நாட்கள் வரை பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வழியாக பயணிக்கும் கப்பல்கள் கட்டணம் இன்றி செல்லலாம்.

இதன் காரணமாக ஈரான் இந்த கடல் பகுதியில் வைத்திருந்த கடல் கன்னி வெடிகளை அகற்றும் பணியைஅடுத்த 30 நாட்களுக்குள் முழுமையாக முடிக்க இருக்கிறது. மேலும் எதிர்காலத்தில் இந்த பாதை வழியாக எப்படி போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பதற்கான சட்டங்கள் குறித்து ஈரான், ஓமன் மற்றும் வளைகுடா நாடுகள் இணைந்து ஆலோசிக்க உள்ளது.

பாதை மூடப்படவில்லை என்பது தெளிவாகிறது இருந்தாலும்.. ஈரான் இனி இந்த வழித்தடத்தை பயன்படுத்த புதிய விதியை கொண்டு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் பாதையை கடக்க விரும்பும் அனைத்து கப்பல்களும் 48 மணி நேரத்திற்கு முன்பே பயண விபரங்கள் தொடர்பாக தெரிவிக்க வேண்டு.ம் முக்கியமாக இந்த வழித்தடத்தின் மூலம் அதிக அளவிலான போக்குவரத்து நடைபெறுவதால் தாமதங்களை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+