இந்தியாவில் கார் என்பது ஆடம்பரமான விஷயமாக இருப்பதை தாண்டி, அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதேபோல் இந்தியாவில் அப்பர் மிடில் கிளாஸ் முதல் பெரும் பணக்காரர்களின் மத்தியில் அதிக பணம் சேர்ந்து வருவதால் ப்ரீமியம் கார்கள் முதல் ஆடம்பர கார்கள் வரையில் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பெரும் பணக்காரர்கள் ஆடம்பர கார்களையும், ஸ்போர்ட்ஸ் கார்களையும் வாங்குவது அதிகரித்துள்ளது. இப்படி இன்டிரியர் டிசைனரான அமீர் ஷர்மா ஆசையாக வாங்கிய ஃபெராரி கார் மீது மழை காரணமாக ஒரு தெரு நாய் படுத்திருந்ததை பார்த்த அவர், மிகவும் கியூட்டாக இருப்பதால் இந்த நாயை வீடியோ எடுக்க முடிவு செய்து அதை கொஞ்சிக்கொண்டு வீடியோ எடுத்தார்.
இந்த வீடியோவை அமீர் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் என்னுடைய ஃபெராரி கார் கவர் இந்த தெரு நாய்க்கு மெத்தையாக மாறியுள்ளது என்ற கேப்ஷன் மற்றும் வழக்கமான #begood #bekindtoanimals #onelife #supercars #ferrari #dogood இந்த ஹேஷ்டேக் உடன் பதிவிட்டார்.
இந்த வீடியோவை கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் பார்த்துள்ளது மட்டும் அல்லாமல் 95000 பேருக்கும் அதிகமாக லைக் செய்துள்ளனர். இதன் மூலம் இன்ஸ்டாவில் கடந்த வாரத்தின் முக்கிய டிரெண்டிங் வீடியோவாக இது இருந்தது. பொதுவாக கார்களில் நாய்கள் அருகில் படுத்திருந்தால் கூட விரட்டும் மக்கள் மத்தியில் ஆடம்பர ஃபெராரி கார் மீது படுத்திருந்தும் அதை துரத்தாமல் கொஞ்சிய அவரின் செயல் பலரையும் பாராட்ட வைத்தது.
இந்த வீடியோவில் இவர் தானே கூலான மனுஷன் என்று ஒருவர் பாராட்ட, மற்றொருவர் சிலர் நாய்களை அடிப்பதை நான் பார்த்திருக்கிறேன், நாய்கள் அவர்களின் கார் அல்லது பைக்குகள் அல்லது வேறு ஏதாவது தீங்கு விளைவிக்கும் என்பதற்காக அடிப்பார்கள். இது அத்தகையவர்களின் முகத்தில் அறைந்தது போல் இருக்கிறது. கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கள் காரில் அமர்ந்திருக்கும் நாயைப் பார்த்து ஒருவர் கூலாக இருக்கிறார் என கமெண்ட் செய்துள்ளார்.

இன்னும் சிலர் இந்த நாயை அவர் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அமீர் ஷர்மா-வின் செயலை நீங்க எப்படி பார்க்குறீங்க கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications