சென்னை: கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடுப்பதற்காக தமிழ்நாட்டில் புதிய சட்டத்திருத்த மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் கடன்களை வாங்குகின்றனர். வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் கடன் வழங்கக்கூடிய நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக அவற்றை வசூலிக்க தொடங்குகின்றன. இந்த வலுக்கட்டாய வசூலை தடுக்க வகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதா தான் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன:
1. இந்த சட்ட திருத்தத்தின் படி கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின்தொடரவோ அல்லது அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
3. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக கடனை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. நிதி நிறுவனங்களின் கெடுபிடி நடவடிக்கைகளால் கடன் பெறுபவர் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்பட்டு வழக்கு பதியப்படும்.
5. இந்த குற்றத்தில் கைது செய்யப்படும் நபர்கள் பிணையில் வெளிவர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வசையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட பிறகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பிறகு அரசாணையாக வெளியிடப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்படும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ,கூலி தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள் உள்ளிட்டோர் தங்களுடைய தேவைகளுக்காக நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை வாங்குகின்றனர். கடன் வழங்கும் நிறுவனங்கள் முறையற்ற வழிகளை பின்பற்றி கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றன. இதன் காரணமாக இவ்வாறு கடன் பெற்றோர் சில சமயங்களில் தற்கொலைக்கு செல்லும் நிலைக்கு கூட ஆளாகின்றனர். இந்த நிலையில் தான் அரசு இப்படி ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications