சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கிறது. அதற்கு வேலை வாய்ப்புகள் மட்டும் என்ன விதிவிலக்கா? அவற்றையும் நீங்கள் ஆன்லைனிலேயே தேடலாம். ஆனால் நீண்ட நாட்கள் வேலை தேடியும் ஆன்லைனில் சிலருக்கு வேலை கிடைப்பதில்லை. நீங்களும் இதே போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டால், வேலை தேடும் முயற்சியில் நீங்கள் சில தவறுகளைச் செய்திருக்கலாம். அவை என்ன தவறு என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
ரெஸ்யூம்கள் மற்றும் கவர் லெட்டர்: விண்ணப்பதாரர்கள் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று, அனைத்து வேலைகளுக்கும் பொதுவான விண்ணப்பம் மற்றும் கவர் லெட்டரைப் பயன்படுத்துவது. ஒவ்வொரு குறிப்பிட்ட வேலை விண்ணப்பத்திற்கும் உங்களின் விண்ணப்பம் மற்றும் கவர் லெட்டரை மாற்றியமைக்க வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து தனித்து நிற்க ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள ஜாப் டெஸ்கிரிப்ஷன்களுடன் பொருந்தக்கூடிய திறன்கள், அனுபவங்கள் மற்றும் உங்களுடைய சாதனைகளை முன்னிலைப்படுத்தி கவர் லெட்டர் மற்றும் ரெஸ்யூம்களை மாற்றி அமைப்பது அவசியம்.

நெட்வொர்க்கிங்: பலர் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் மட்டுமே வேலை தேடுகின்றனர். Linkedin போன்றவற்றில் அக்கவுண்ட்டை உருவாக்கி உங்கள் துறை சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வது, சக ஊழியர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது போன்றவற்றை செய்யும்போது வேலை வாய்ப்புகளை எளிதில் கண்டறிய முடியும். நிறுவனங்கள் மற்றும் பணிகளைப் பற்றிய தகவல்களையும் இதன் மூலம் பெறலாம்.
ஃபாலோ அப்: ஒரு வேலைக்கு விண்ணப்பித்த பிறகு அல்லது நேர்காணலில் கலந்து கொண்ட பிறகு வேலை தேடும் நபர்கள், அவர்களின் மேலாளர்களுடன் பேசி பணியமர்த்தல் குறித்த விவரங்களைப் பின்தொடர்ந்து கேட்பதில்லை. இது போன்ற சிறு விஷயங்களைச் செய்தால், உங்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை வரும். மேலும் மெயில் மூலமாக நேர்காணல் எடுத்ததற்கு நன்றியையும் தெரிவிக்கலாம். இதுவும் உங்கள் மேலாளர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
ரெஸ்யூமில் உங்களுக்கு இல்லாத திறனை வைத்திருப்பது: சிலர் ரெஸ்யூம் பார்ப்பதற்கு பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கே தெரியாத திறன்களையும் மற்ற விவரங்களையும் வைத்திருப்பார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது, வேலைக்கு சேர்ந்த பிறகு உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆகவே உங்களுக்கு எந்த திறன்களில் ஆர்வம் அதிகமோ.. உங்களுக்கு எந்த விஷயம் அதிகமாக தெரியுமோ.. அதைப்பற்றி மட்டுமே ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டும்.
நிறுவனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்: ஒரு நிறுவனத்தில் பணிபுரிய நீங்கள் விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், அவர்களின் வெற்றிகள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற விவரங்கள் உங்களுக்கு நேர்காணலின்போது உதவலாம். நிறுவனத்தைப் பற்றி புரிந்து கொண்டு நேர்காணலுக்குச் செல்வதால், நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சிலர் அந்த நிறுவனத்தின் பெயர் கூட சரியாகத் தெரியாமல் ஆன்லைன் நேர்காணலுக்கு செல்வார்கள். இது போன்றத் தவறுகளைச் செய்யக் கூடாது.
மேற்கண்ட டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் ஆன்லைனில் வேலை தேடி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications