வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்கள் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கின்றன. ஆனால், சில நேரங்களில் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் அசையாமல் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இது உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஸ்டிக்கர்களை மட்டுமே நம்பியிருக்கும் பயனர்களுக்கு சற்று எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கலாம். இந்த பிரச்சனையை நீங்கள் சந்தித்தால், அதை உடனடியாக தீர்க்கக் கூடிய ஒரு எளிய வழி உள்ளது. அது குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் ஏன் சில நேரங்களில் அசைவதில்லை?: இதற்கான உண்மையான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை, ஆனால் இந்தப் பிரச்சனை ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் உள்ள பிரச்சனையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலுக்கு போனை "Restart" செய்வது பெரும்பாலும் நல்ல தீர்வாக இருக்கும்.

இருப்பினும், "Restart" செய்வது வேலை செய்யவில்லை என்றால், ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனிமேட் செய்ய ஒரு சிறந்த யுத்தியை முயற்சிக்கலாம்.
அசையாத வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை சரிசெய்வது எப்படி?: ஆண்ட்ராய்டு மொபைலில் அசையாத வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை சரிசெய்ய, வாட்ஸ்அப் ஐகானை லாங் ப்ரெஸ் செய்யவும்.
"App info" என்பதற்குச் சென்று, "Alarms and reminders" என்பதைத் தேர்ந்தெடுத்து, அதை ஆஃப் செய்து ஆன் செய்யவும். இந்தச் செயல் பொதுவாக ஸ்டிக்கர் அனிமேஷன் பிரச்னையைத் தீர்க்கும். இதே பிரச்சனை மீண்டும் தொடர்ந்தால், "Alarms and reminders" விருப்பத்தை மீண்டும் ஆஃப் செய்து ஆன் செய்யவும்.
வாட்ஸ்அப் தொடர்ந்து பயனர்களுக்கு உதவும் வகையில் புது அப்டேட்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் வாட்ஸ்அப்பின் மெட்டா AI. இதன் மூலம் உங்களுடைய கற்பனையான உருவத்தை, நீங்கள் படமாக மாற்றி பெற்றுக் கொள்ள முடியும்.
இது போதாது என்றால் ஸ்டிக்கர் பிரியர்களுக்கு பல அப்ளிகேஷன்கள் பிளே ஸ்டோரில் உள்ளன. அதில் உங்களுக்கு விருப்பமான அப்ளிகேஷன்-களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் மிகவும் வேடிக்கையானதாக இருப்பதால் பலரும் தங்களுடைய சாட்களில் அதிகம் இதனை பயன்படுத்துகின்றனர். ஸ்டிக்கர்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும், நம்முடைய கருத்தை சுருக்கமாக சொல்லவும் உதவும் வகையில் உள்ளன. சில நேரங்களில் ஸ்டிக்கர்களின் அனிமேஷன் அசையாமல் இருக்கும். இது போன்ற நேரங்களில் என்ன சொல்ல வந்தோம் என்பது பிறருக்கு போகாமல் இருக்கலாம். இது போன்ற நேரங்களில் மேலே கூறப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்களை பின்பற்றுவதால் நீங்கள் அனிமேஷனை சரி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications