விஜய் உடன் சம்பளத்தில் போட்டி.. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

ஏப்ரல் 8 ஆம் தேதியன்று 42 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அல்லு அர்ஜூன் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் அவரது புஷ்பா: தி ரூல் படத்தின் டீஸருக்கா ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அவரது ரசிகர்கள் இதற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தெலுங்கு திரைப்படத்துறையில் 21 ஆண்டுகள் வெற்றிகரமாக ஹீரோவாக வளம் வருகிறார் அல்லு அர்ஜூன். அவரது முழு உருவ மெழுகுச் சிலை துபாயில் உள்ள மேடம் துஸாண்ட்ஸ் மியூசியத்தில் திறக்கப்பட்டுள்ளது.

விஜய் உடன் சம்பளத்தில் போட்டி.. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

அல்லு அர்ஜூன் நடனத்தில் கைதேர்ந்தவர், தமிழ் திரையுலகிற்கு எப்படி விஜையோ அதேபோஸ் தெலுங்கு திரையுலகிற்கு இவர். 2021இல் வெளியான புஷ்பா படம் மெகா ஹிட்டான நிலையில் இப்படத்தில் 2வது பாகம் வெளியாக உள்ளது. தெலுக்குத் திரையுலகில் இதன்மூலம் அவர் ஒரு வெற்றிநாயகனாக உருவெடுத்தார். அவரது சிறந்த நடிப்புக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

சொத்து மதிப்பு: அல்லு அர்ஜுனின் நிகர சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.460 கோடிகள் ஆகும்.
அவரது ஆண்டு வருமானம் ரூ.90 கோடி. ஒரு படத்துக்கு அவர் ரூ.65 கோடியை சம்பளமாக வாங்குகிறார்.

இந்த நிலையில் புஷ்பா: தி ரூல் படத்துக்காக அவர் ரூ.100 கோடியை சம்பளமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

விளம்பரத் தூதர்: அல்லு அர்ஜூன் தனது நடிப்புத் தொழிலைத் தவிர, குளிர்பானங்கள், ஓடிடி தளங்கள், உணவு விநியோக பயன்பாடுகள், பலவற்றை உள்ளடக்கிய பல நன்கு அறியப்பட்ட பிராண்டுகளின் தூதராகப் பணியாற்றுகின்றார். இன்ஃபினிட்டி நெட் வொர்த்தின் கூற்றுப்படி, அவர் தனது அக்ரிமென்டுக்கு ரூ.4 கோடி சம்பாதிக்கிறார்.

பிசினஸ்: இதுமட்டுமல்லாமல் அல்லு அர்ஜூன் வணிக முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். அவர் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஒரு ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் வைத்திருக்கிறார். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சுற்றுப்புறத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள செழுமையான வீட்டை வைத்திருக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள அவரது சொத்துடன், அல்லு அர்ஜூன் 2015 இல் மும்பையில் அமைந்துள்ள 2பிஎச்கே குடியிருப்பில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்தார்.

கார்கள் மீதான ஆர்வத்திற்கு பெயர் பெற்ற அல்லு அர்ஜூன், ஒரு தனியார் ஜெட் மற்றும் ஆடம்பரமான வேனிட்டி வேன் உட்பட உயர்தர வாகனங்களின் படையையே தனது கலெக்ஷனில் வைத்திருக்கிறார்.

இளமைக்காலம்: அல்லு அர்ஜுனின் அங்கிள் பிரபல தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான அல்லு அர்ஜூன் பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

2011 மார்ச் 6 ஆம் தேதியன்று அவர் ஸ்நேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2014இல் அல்லு அயான் என்ற மகன் பிறந்தார்.

திரை வாழ்க்கை: தனது தந்தை அல்லு அரவிந்த் எடுத்த விஜேதா என்ற படத்தில் அறிமுகமானார். கங்கோத்ரி என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார். முதல் படத்துக்கா அவருக்கு பிலிம்பேர் விருது உள்பட நான்கு விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகர் என்ற விருதும் கிடைத்தது. அவர் இரண்டு முறை பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். அதற்கடுத்த படமான ஆர்யா மெகா பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+