ஆக்ஸியம் 4 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா விண்வெளியில் இருந்து முதன்முறையாக நேரலையில் பேசியிருக்கிறார்.
ஆக்ஸியம் 4 திட்டம்: ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம் மூலம் ஆக்ஸியம் 4 திட்டம் வாயிலாக இந்தியாவை சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா , அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளை சேர்ந்த தலா ஒரு வீரர்கள் என நான்கு பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களின் விண்கலம் இன்று மாலை 4.30 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய இருக்கிறது.

விண்கலத்தில் இருந்து நேரலை: இதனிடையே டிராகன் விண்கலத்தில் இருந்து இந்த நான்கு வீரர்களும் நேரலையில் உரையாற்றினர் . அப்போது பேசிய இந்தியாவின் சுபான்ஷூ சுக்லா, என் நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம் என தெரிவித்திருக்கிறார். இந்த பயணம் மிகவும் அற்புதமானதாக இருக்கிறது என தெரிவித்திருக்கும் அவர் வெற்றிடத்தில் திடீரென மிதந்து கொண்டிருக்கிறோம் இதை எண்ணி பார்க்கவே எனக்கு வியப்பாக இருக்கிறது என கூறியிருக்கிறார்.
குழந்தையை போல கற்றுக் கொள்கிறேன்: நான் விண்வெளியில் எப்படி நடப்பது ,எப்படி உணவு உட்கொள்வது என தற்பொழுது ஒரு குழந்தையை போல கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு வருகிறேன் என கூறியுள்ள அவர் நேற்றில் இருந்து நிறைய தூங்கி கொண்டிருக்கிறேன், கொஞ்சம் கொஞ்சமாக என் உடல் இந்த சூழலுக்கு ஏற்ப மாறி வருகிறது என கூறியுள்ளார். தன்னுடைய விண்வெளி பயணம் தனிப்பட்ட வெற்றி அல்ல இது ஒரு கூட்டு முயற்சியின் மூலம் கிடைத்த வெற்றி என தெரிவித்திருக்கும் அவர் இந்த தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.
அன்னப்பறவை பொம்மை : மேலும் தன்னுடன் தன்னுடன் ஒரு அன்னப்பறவை பொம்மையை கொண்டு சென்றிருக்கிறேன், இதற்கு ஜாய் என பெயர் சூட்டி இருக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார். நான் விண்வெளியில் என்னுடைய அனைத்து அனுபவங்களை புகைப்படங்கள் , வீடியோக்களாக எடுக்க போகிறேன், பூமிக்கு திரும்பிய உடன் அனைவருடனும் அதனை பகிர்ந்து கொள்வேன் என அவர் கூறியிருக்கிறார் .
ஏன் பொம்மை கொண்டு செல்கின்றனர்?: தன்னுடன் அன்னப்பறவை பொம்மையை கொண்டு சென்றதையும் அந்த நேரலையில் குறிப்பிட்டு பேசிய சுக்லா, அன்னப்பறவை ஞானத்தை குறிக்கிறது இது பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசை குறிகாட்டியை விட அதிக அர்த்தம் கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார் . பொதுவாக விண்வெளிக்கு மனிதர்கள் பயணம் செய்யும்போது எல்லாம் அவர்களுடன் இதுபோன்ற மென்மையான ஒரு பொம்மையை கொண்டு செல்வார்கள். புவி ஈர்ப்பு விசை பூஜ்ஜிய நிலையை எட்டிவிட்டதா என்பதை கண்டறிவதற்காக இத்தகைய மென்மையான பொம்மைகளை விண்வெளி வீரர்கள் பயன்படுத்துவார்கள்.
வீரர்களை ஒருங்கிணைத்த பொம்மை: ஆக்ஸியம் 4 திட்டத்திலும் வீரர்கள் அன்னப்பறவை பொம்மையை கொண்டு சென்றிருக்கிறார்கள், அதற்கு ஜாய் என பெயரிட்டுள்ளனர். இந்தியாவில் அன்னப்பறவை என்பது ஞானம் ,தூய்மை மற்றும் உண்மை ஆகியவற்றை உணர்த்தும் ஒரு குறியீடாக பார்க்கப்படுகிறது. போலந்து நாட்டிலும் அன்னப்பறவை தூய்மை, விஸ்வாசம் மற்றும் மீன் தன்மையை குறிக்கிறது. ஹங்கேரி நாட்டில் அன்னப்பறவை விசுவாசம் . கருணை மற்றும் இயற்கையின் அழகை எடுத்துக்காட்டும் ஒரு குறியீடாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைக்க கூடிய ஒரு கலாச்சார அடையாளமாகவும் இந்த அன்னப்பறவை பொம்மை மாறி இருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications