நேதாஜி முகம் கொண்ட ரூபாய் நோட்டு.. இந்திய விடுதலைக்காக உருவான நாணயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலும் நாம் பார்ப்பது தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் தான். இப்படியிருக்கையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் கொண்ட ரூபாய் நோட்டுகளை நீங்கள் பார்த்து உள்ளீர்களா அல்லது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் கொண்ட ரூபாய் நோட்டு இருப்பது உங்களுக்குத் தெரியுமா..?

உண்மையில் அப்படியொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

பிரிட்டிஷ் படைக்கு எதிராக இந்திய போராட வேண்டும் என்பதற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவம் 1942ல் உருவாக்கப்பட்டது. போருக்கு தேவையான ஆயுதங்கள், படைகளுக்குத் தேவையானவற்றை ஏற்பாடுகள் செய்ய அதிகளவிலான நிதி தேவைப்பட்டது.

ஆசாத் ஹிந்த் வங்கி

ஆசாத் ஹிந்த் வங்கி

அப்போது தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பான் உதவியுடன் அன்றைய பர்மா-வின் ரங்கூன் பகுதியில் 1944ஆம் ஆண்டு ஆசாத் ஹிந்த் வங்கியை உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலை விரும்பும் மக்கள் இந்த வங்கி வாயிலாக அதிகளவிலான நிதியுதவியைச் செய்தனர்.

 ஆசாத் ஹிந்த் வங்கி ரூபாய் நோட்டு

ஆசாத் ஹிந்த் வங்கி ரூபாய் நோட்டு

ஆசாத் ஹிந்த் வங்கி உருவாக்குவதற்கு முன்பு மக்கள் கொடுக்கும் நிதியில் தான் மொத்த போராட்டமும் நடைபெற்றது. ஆனால் ஆசாத் ஹிந்த் வங்கி துவங்கப்பட்ட பின்பு வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு பயன்பாட்டு வழங்கத் துவங்கியது. இந்த ரூபாய் நோட்டில் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் இருந்தது.

ஜப்பான்

ஜப்பான்

ஆசாத் ஹிந்த் வங்கி பர்மா-வின் ரங்கூன் பகுதியில் மட்டும் அல்லாமல் ஜப்பான் நாடு முழுவதும் வங்கி கிளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வங்கியில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் இந்தியா முழுவதும் குறிப்பிட்ட காலம் வரையில் புழக்கத்தில் இருந்தது.

இணையத்தில் வரைல்

இணையத்தில் வரைல்

இப்படிப் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு தான் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. 1980ல் மாநில அரசு வேளையில் இருந்து ஓய்வு பெற்ற ராம் கிஷோர் துபே-வின் தாத்தாவின் ராமாயணம் புத்தகத்தில் புரட்டிய போது ஆசாத் ஹிந்த் வங்கி வெளியிட்ட 1,00,000 ரூபாய் மதிப்புடைய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முகம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு 2010ல் கிடைத்ததுள்ளது. ஆனால் தற்போது இந்த ரூபாய் நோட்டு புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது. புகைப்படம்:திஹிந்து

இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ்

இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ்

இந்த ரூபாய் நோட்டுச் சுதந்திரத்திற்கு முன்பு வெளியிட்டு இருந்தாலும், இந்த ரூபாய் நோட்டில் சுதந்திர இந்தியா "swatantra bharat" என்ற வாசகமும், ஜெய்ஹிந்து என்ற வாசகமும் உள்ளது. அனைத்திற்கும் மேலாக இந்த ரூபாய் நோட்டில் இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவை இணைந்த பாரதத்தின் வரைபடமும் உள்ளது. புகைப்படம்:விக்கி

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Subhash Chandra Bose face printed Azad Hind Bank rupee note photograph viral on internet

Subhash Chandra Bose face printed Azad Hind Bank rupee note photograph viral on internet
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X