அதிரடி அரசியல்வாதிகளில் ஒருவர் நம் சுப்ரமணியன் சுவாமி. கல்லூரி ஆசிரியர், பொருளாதார வல்லுநர் மற்றும் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் என பன்முகம் கொண்டவர்.
இவர் அடிக்கடி, அரசியல் வட்டாரங்களில் பேசும் சில விஷயங்கள் அதிரடியாக சர்ச்சையைக் கிளப்பும். இப்போதும் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். ஆனால், எந்த ஒரு சர்ச்சையை கிளப்பவில்லை என்றாலும், யாருக்கோ ஏதோ செய்தி சொல்வது போலச் சொல்லி இருக்கிறார்.
என்ன செய்தி சொல்லி இருக்கிறார், எங்கு சொல்லி இருக்கிறார் போன்ற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
ட்விட்டர் பக்கத்தில்
நேற்று மே 08, 2020 அதி காலை 05.19 மணி அளவில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, தன் ட்விட்டர் பக்கத்தில் மேக் இன் இந்தியா (Make in India) குறித்து ஒரு ட்விட் போட்டு இருக்கிறார். அந்த ட்விட்டைக் காண கீழே கொடுத்து இருக்கும் ட்விட்டர் லிங்கை க்ளிக் செய்யவும்: https://twitter.com/Swamy39/status/1258544613075251201
ட்விட் விவரம்
சுதேசி இலக்கை ”மேக் இந்தியா”-வாக மீண்டும் கொண்டு வாருங்கள் என 1972-ம் ஆண்டிலேயே, முதலில் குரல் கொடுத்தேன். அப்போது இந்த முழக்கம் மிஸ் காந்தியை (அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை) கோபமடையச் செய்தது. அப்போது சுதேசி முழக்கத்தால் யு எஸ் எஸ் ஆர் (ஒருங்கிணைந்த ரஷ்யா) அதிகம் பாதிக்கப்பட்டது.
மூன்று விஷயம்
ஆனால் இன்று சுதேசி என்றால் உணவு, மருத்துவம் மற்றும் ராணுவ தொழில்நுட்பம் ஆகிய மூன்று விஷயங்களில் நாம் தற்சார்பாக இருப்பது தான். இது அமெரிக்கா மற்றும் சீனாவின் ஏற்றுமதி வியாபாரத்தை பாதிக்கும், என தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்து இருக்கிறார் பாஜகவின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி.
யாருக்கு
இந்த ட்விட்டை இப்போது ஏன் செய்தார், யாருக்காகச் செய்தார். இவர் எதையாவது உள் அர்த்தத்துடன் செய்து இருக்கிறாரா என எதுவும் ட்விட்டில் சொல்லப்படவில்லை. பொதுவாக, ஆட்களின் பெயரைக் குறிப்பிட்டு நெத்தி அடி அடிக்கும் நம் சுப்ரமணியன் சுவாமி, இந்த முறை வெறுமனே செய்தியை மட்டும் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications