சென்னை போக்குவரத்தில் மின்சார ரயில் சேவைகள் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன. குறிப்பாக கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையிலான மார்க்கத்தில் இயக்கப்படக்கூடிய மின்சார ரயில்களில் நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பயணம் செய்கின்றனர்.
வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லு மாணவ, மாணவிகள் என எப்போதுமே கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதும். அதுவும் பீக் அவர்களில் கால் வைக்க கூட இடம் இருக்காது. பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

ஆனால் சென்னையின் மிக முக்கியமான ஒரு வழித்தடமாக இருக்கும் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. வரும் 20ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரையிலான 45 நாட்களுக்கு கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைக்கப்பட உள்ளது.
இதன்படி கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படக்கூடிய 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன. இது இந்த மார்க்கமாக பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு மிகப்பெரிய திண்டாட்டத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே இந்த ரயில் வழித்தடத்தை பயன்படுத்தக்கூடிய மக்கள் , பள்ளி , கல்லூரி செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் தங்களுடைய பயணத்தை சரியாக திட்டமிட்டு கொள்வது நல்லது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்ட மின்சார பயல்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 2.80 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளுக்காக புறநகர் ரயில் சேவைகளை குறைக்க உள்ளனர்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் இணைப்பு, வாகனம் நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இதன் ஒரு பகுதியாக தான் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.
கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தற்போது 218 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் 166 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் புறநகர் மின்சார ரயில்கள் நடைமேடை 10 ,11 ஆகியவற்றுக்கு மாற்றாக 20ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைமேடை 5, 6லிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளையில் ஏசி மின்சார ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 8 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயகப்படும் நிலையில் அது 15 நிமிட இடைவெளிகளாக மாற்றப்பட உள்ளதாம். 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த வழியில் பயணம் செய்யக்கூடிய ஆயிரக்கணக்கான பயணிகள் இனி பெரிய திண்டாட்டத்தை சந்திக்க போகின்றனர். இவர்களுக்கு ஏற்ற வகையில் கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் ரயில் பயணத்தை போல குறைந்த கட்டணமும், விரைவான பயணமும் பேருந்துகளில் கிடைக்காது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ரயில்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும், அதே வேளையில் ரயிலுக்கு மாற்றாக மற்ற போக்குவரத்துகளை நாட வேண்டி இருக்கும் என்பதால் பயணிகள் முன் கூட்டியே திட்டமிட்டு கொள்வது தேவையற்ற டென்சன்களை குறைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications