கடந்த சில ஆண்டுகளாக டாடா குழுமத்தின் பட்ஜெட் ஆடை வணிக பிரிவான Zudio பெரு நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரையில் அதிகப்படியான வர்த்தகத்தையும் வருவாயையும் பெற்று வருவதோடு இளம் தலைமுறையினர் மத்தியில் பெரிய அளவில் டிரெண்டிங் ஆன விஷயமாக உள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து Zudio மார்ச் மாதத்தில், கிழக்கு டெல்லி பகுதியில் தனது 506வது கடையைத் திறந்தது, குருகிராமில் 22,000 சதுர அடி ரீடைல் விற்பனை தளத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் பிராண்டுக்கு Zudio பெரும் போட்டியாக உள்ளது.

உள்நாட்டுப் பங்கு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் அறிக்கைப்படி, 2024ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு ரீடைல் ஆடை விற்பனை துறை மந்தமான தேவையை எதிர்கொண்ட நிலையிலும், Zudio விதிவிலக்காகச் சிறப்பான வருவாய் வளர்ச்சியை பெரும் என கணித்துள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சிக்குப் பின்னால் என்ன ரகசியம் இருக்கிறது?
பிரபல முதலீட்டு நிர்வாகியான சௌரவ் முகர்ஜியா Zudio பற்றியும், அதன் ரகசியத்தை பற்றி கூறுகையில், Zudio-வின் வெற்றியின் ரகசியம் வெகு சில நாட்களிலேயே தனது கையிருப்பில் இருக்கும் ஆடைகளை அப்டேட் செய்யும் திறனே சந்தையில் தனித்தும் வேகமாக வளரும் சக்தி கொண்டு இருக்கிறது என்று நம்புகிறார்.
கடந்த ஆண்டு, மார்செல்லஸ் முதலீட்டு மேலாளர்கள், Zudio-வை நிர்வாகம் செய்யும் டாடா டிரெண்ட் என்ற ஆடை வணிக நிறுவனத்தை தங்களது தொடர்ச்சியான கூட்டு முதலீட்டு திட்டத்தில் (Consistent Compounders Portfolio) சேர்த்துள்ளதாகக் கூறியுள்ளது.
Zudio பிராண்டின் பலமே அதன் விநியோக சங்கிலி மற்றும் தயாரிப்பு மேம்பாடுகளை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளது தான் என்று மார்செல்லஸ் நிறுவனம் கூறுகிறது. இதனாலே ஒவ்வொரு மாதமும் புதிய ஆடைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளது.
இதேபோல் குறைவான விலையில் தரமான பொருட்களை வழங்குவது மூலம் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறுவது மூலம் தனது பொருட்களின் இருப்பை 6 மடங்கு அதிகரித்து வருகிறது. டாடா குழுமம் தனது WESTSIDE பிராண்டின் மூலம் இத்துறையில் பெரிய அளவிலான அனுபவத்தைப் பெற்றது மூலம் விளம்பரம் கூட செய்யாமல் அசத்தி வருகிறது.
Zudio பிராண்ட் 15 நாட்களுக்கு ஒருமுறை தங்கள் கையிருப்பில் இருக்கும் ஆடைகளைப் புதுப்பிக்கிறது. தொழில்துறையில் வேறு எந்த ஆடை நிறுவனமும் தங்கள் கையிருப்பை இவ்வளவு வேகமாக மாற்றுவதில்லை. இதனால் தங்கள் போட்டியாளர்களை விட 3-5 மடங்கு வேகமாக வளர்ந்து வருகின்றனர். ஆசியன் பெயின்ட்ஸின் உத்தியை ஆடைத் துறையில் செயல்படுத்தியுள்ளதாக சௌரவ் முகர்ஜியா கூறுகிறார்.
மேலும் Zudio-வை நிர்வாகம் செய்யும் டாடா டிரெண்ட் இதே பார்மூலாவில் வேகமாக வளர்ந்தால் அடுத்த 20 வருடத்தில் 2000X லாபத்தை அளிக்க முடியும், 20 வருடத்திற்கு முன்பு டைட்டன் இதே பணியைத் தான் செய்தது. டாடா டிரென்ட் பங்குகள் இன்று 0.84 சதவீதம் சரிந்து 3899 ரூபாயாக உள்ளது, ஆனால் 2024ல் மட்டும் 29.88 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 186.97 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 5 வருடத்தில் 1003.44 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications