முதலாளியாக வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும், இதில் வெற்றி என்பது சிலருக்கு மட்டுமே உள்ளது. ஆனால் சிலருக்கு எதேர்ச்சியாக துவங்கிய முயற்சிகள் பலன் அளித்து மாபெரும் வெற்றியை அடைந்துவிடுவார்கள். இதை அதிர்ஷ்டம் என சிலர் கூறினாலும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் ஒருவரின் வர்த்தகத்தை துவங்குவதும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதும் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
கொரோனா காலத்தில் பல கோடி மக்களின் வாழ்க்கை தடம்புரண்டாலும், சிலரின் வாழ்க்கை புதிய உச்சத்திற்கு சென்றது அதில் ஒருவர் தான் இந்த 19 வயது சிறுவன். உதயப்பூர்-ஐ சேர்ந்த திக்விஜய் சிங் கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் மூலம் வீட்டில் முடங்கினான், அப்போது திக்விஜய் சிங்கிற்கு வயது வெறும் 16. போரடிக்கிறது என்பதற்காக பல விஷயங்களை செய்து சலித்துபோய், யூடியூப் மூலம் வீட்டிலேயே சாக்லேட் செய்வதை கற்றுகொண்டான்.

இப்படி விளையாட்டாக துவங்கிய முயற்சி இன்று 1 கோடி ரூபாய் வரையிலான வருமானம் ஈட்டும் வர்த்தகமாக வளர்ந்துள்ளது. இந்த சிறுவனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது தமிழ்நாடு என்பதுதான் முக்கியமான விஷயம்.
ஹோம் மேட் சாக்லேட் என்பது பெரிய விஷயமில்லை, ஆனால் திக்விஜய் சிங் சாக்லெட்-ல் பழங்கள், சில முக்கிய மசாலா பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து தயாரித்துள்ளான். உதாரணமாக ஜாமுன், குங்குமப்பூ போன்ற பல முக்கிய பொருட்களை வைத்து சாக்லேட் தயாரித்துள்ளான்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த திக்விஜய் சிங்-ன் தந்தை ஆட்டோமொபைல் கடையில் பணியாற்றி வருகிறார். சாக்லேட் தயாரிப்பது குறித்து எவ்விதமான அடிப்படையும் தெரியாமல் இருந்த போது லாக்டவுன் அதற்கான நேரமும், யூடியூப் அதற்கான கற்றலையும் கொடுத்தது. கொரோனா காலத்தில் திக்விஜய் சிங்-யின் தந்தை ஒரு கார் வாங்கியுள்ளார், அப்போது கார் டீலர்கள் HOMEMADE சாக்லேட் பெட்டியை கொடுத்துள்ளனர்.
அங்கிருந்து உருவானது பிஸ்னஸ் ஐடியா, தான் உருவாக்கிய சாக்லேட்-ஐ விற்பனை செய்ய தனது ஊரில் இருக்கும் கார் டீலர், இரு சக்கர வாகன டீலர்கள், ஹோட்டல் ஓனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கான்டிராக்ட் பெற்றார். முதல் ஆர்டர் 2021ல் 1000 சாக்லேட்-க்கு வந்தது, வர்த்தகத்தை பெரிதாக்கும் நேரத்தில் Saraam என்ற பிராண்ட் பெயருடன் அறிமுகம் செய்தார் திக்விஜய் சிங்.
தற்போது இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் திக்விஜய் சிங் வருடத்திற்கு 2 டன் சாக்லேட் விற்பனை செய்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை பெற்றுள்ளார். கொரோனா காலத்தில் சாக்லேட் செய்ய கற்றுக்கொண்ட போது திக்விஜய் சிங் வயது 16 மட்டுமே தற்போது 19 வயதாகிறது.
திக்விஜய் சிங் தமிழ்நாடு, கேரளா-வில் இருந்து தான் cacoa, பழங்கள், ஆகியவற்றை வாங்கி உதய்பூர், ஜெய்பூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. உதய்பூர், ஜெய்பூர் ஆகிய பகுதிகளில் ரீடைல் கடைகளை கொண்டு Saraam பிராண்ட் பெயருடன் சாக்லேட்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications