குழந்தைகளுக்கு பொதுவாக பொம்மைகள் என்றாலே ரொம்ப பிடிக்கும். இதனால் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு பல விதமான பொம்மைகளை வாங்கி கொடுக்கிறார்கள். பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளே விற்பனை வருகின்றன.
பிளாஸ்டிக்கில் நச்சுத்தன்மை உள்ளதால் அது குழந்தைகளுக்கு ஆபத்தாக முடியும். இதனால் பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு மாற்றாக மரத்திலான பொம்மைகள் தற்போது விற்பனைக்கு வரத்தொடங்கி விட்டன. மரத்தினாலான பொம்மைகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் கலக்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த 64 வயதான கே.கோகிலா.

அரசு ஊழியராக இருந்து தொழில்முனைவோராக மாறியவரான கோகிலா, தொடங்கிய 5 ஆண்டுகளிலேயே அவர் தனது மர பொம்மைகள் வர்த்தகத்தை ரூ.3.5 கோடி அளவுக்கு உயர்த்தி வி்ட்டார்.
கோகிலாவின் வர்த்தக வெற்றி பயணம் அவ்வளவு எளிதானதாக அமைந்திருக்கவில்லை. தனது வர்த்தக வெற்றி பயணம் குறித்து கோகிலா கூறுகையில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை அன்பான கணவர், பள்ளி செல்லும் 3 குழந்தைகள் என்று என் வாழ்க்கை இன்பமாக அமைந்திருந்தது. என் கணவர் ரசாயன உர விநியோகஸ்தராக இருந்தார்.
எனது 42 வயதில் எனது கணவர் நுரையீரல் தொடர்பான நோயால் காலமானார். அப்போது கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். இந்த உர வணிகத்தால் தான் அவரது உடல்நல சரியில்லாமல் போனதாக சந்தேகித்தோம். அதனால் எனது கணவரின் கடைசி நாட்களில் இந்த உர வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்து இருந்தோம். இதனையடுத்து எனது கணவர் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் ரசாயனம் இல்லாத மர பேக்கேஜிங்கிற்கான ஆர்டர்களை ஏற்றுமதியாளர்களிடமிருந்து பெற தொடங்கியிருந்தார்.
நான் வேலைக்கு சென்றாலும் எஞ்சிய நேரத்தில் எனது கணவருடன் சேர்ந்து மரத்தை வெட்டுதல், மெருகூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் போன்ற தொழிற்சாலை உபகரணங்களில் தேர்ச்சி பெற்றேன். என் கணவர் இறந்த பிறகு, நான் வேலையை கண்காணிக்க தொழிற்சாலைக்கு செல்வேன். பின் என் வேலை செல்வேன்.
பின்னர் மாலையில் மீண்டும் தொழிற்சாலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவேன். ஒவ்வொரு நாளும் 15 மணி நேரத்துக்கும் மேலாக உழைத்தேன். என் குழந்தைகள் கல்வியை முடிக்கும் வரை அவர்களுக்கு ஆதரவளிப்பதில் நான் உறுதியாக இருந்தால் எனது வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்தேன்.
எனது மகன்கள் படிப்பை முடித்து வெவ்வேறு நகரங்களில் வேலைக்கு சென்றனர். நான் தொடர்ந்து தொழிலை நடத்தி வந்தேன். தற்போது செய்து வரும் மர பொம்மைகள் வணிகமான வூட்பீ டாய்ஸை தொடங்குவதற்கு எனது பேரக்குழந்தைகள் தான் காரணம்.
நானும் எனது மருமகளும் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்க சென்றபோதுதான் மர பொம்மைகள் தயாரிப்பு ஐடியா உதயமானது. எல்லா குழந்தைகள் போலவே என் பேரக்குழந்தைகளும் பொம்மையை வாயில் வைத்து சப்பினார்கள். இது உடல் நலத்துக்கு தீங்கானது.
இதனால் கடைகளில் கிடைக்கும் சிலிக்கான் டீத்தர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகளை நாங்கள் விரும்பவில்லை. இதனையடுத்து நான் எனது மருமகள்களுடன் சேர்ந்து நச்சுத்தன்மையற்ற மர பொம்மைகள் குறித்து கற்பனை செய்தேன்.
எங்கள் தொழிற்சாலையில் ஏற்கனவே ஒரு அமைப்பு இருந்ததால், மரத்திலிருந்து எங்கள் சொந்த பொம்மைகளை உருவாக்க முடியும் என்று எங்களுக்கு தோன்றியது. இதனையடுத்து 2020ம் ஆண்டில் எனது மருமகள்களின் ஆதரவுடன் வூட்பீ டாய்ஸ் வணிகத்தை தொடங்கினேன்.
கேரளாவிலிருந்து மரங்களை வாங்கி, உள்ளூர் பெண் கைவினைஞர்களை பணிக்கு அமர்த்தி மர பொம்மைகள் தயாரிப்பு வர்த்தகத்தை தொடங்கினேன். முதலில் தயாரிக்கப்பட்ட 100 பொம்மைகள் இன்ஸ்கிராமில் உடனடியாக விற்பனையானது.
இன்ஸ்டாகிராம் மூலம் சந்தைப்படுத்தப்படுத்தப்பட்ட ஒரு முயற்சி இப்போது அனைத்து முக்கிய ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கும் ஒரு பிராண்டாக வளர்ந்துள்ளது. வூட்பீ டாய்ஸ் தற்போது 110க்கும் மேற்பட்ட தனித்துவமான பொம்மை டிசைன்களை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications