வெற்றிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை 95 வயதில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் லக்ஷ்மன் தாஸ் மிட்டல். இன்று பலரும் 50 - 60 வயதில் ஓய்வு பற்றி சிந்திக்கும்போது, இவர் தனது 60-வது வயதிற்கு பிறகுதான் ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பியுள்ளார்.
ஒரு காலத்தில் எல்ஐசி (LIC) ஏஜென்டாக வலம் வந்தவர், இன்று இந்தியாவின் 3வது பெரிய டிராக்டர் நிறுவனமான சோனாலிகா (Sonalika Group) அதிபராக விஸ்வரூபம் எடுத்துள்ளார். 1970-களில் ஒரு முறை திவாலாகி நடுத்தர வர்க்க சேமிப்பு அனைத்தையும் இழந்த நிலையிலும், மனம் தளராமல் மீண்டும் எழுந்து இன்று சுமார் 45,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிக மூத்த பில்லியனராக கெத்து காட்டுகிறார். அந்த உத்வேகமான வெற்றி பயணம் பற்றி தெரிந்து கொள்வோமா?

பொதுவாக 60 வயதில் ஓய்வு பெற்று கையில் இருக்கும் காசை வைத்து, வாழ்க்கையை சந்தோஷமாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதே இங்கு பலருடைய எண்ணம். சொல்லப்போனால் தங்களுக்கு கிடைக்கும் பென்ஷன் தொகையை வைத்து காலத்தை கழிக்க நினைப்பவர்கள் தான் அதிகம். ஆனால் 60 வயது ஆனால் என்ன? நம்பிக்கை இருந்தால் எப்போதும் ஜெயிக்கலாம் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார் 93 வயது இளைஞர் ஒருவர்.
2024ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்த, அந்த சமயத்தில் 93 வயதான வயதான பில்லியனர் என்ற இடத்தையும் பிடித்தார். இதற்கு முன்பு இந்த இடத்தில் இருந்த கேஷூப் மஹிந்திரா 2023ல் மறைந்த பிறகு, அந்த இடத்திற்கு லக்ஷ்மன் தாஸ் மிட்டல் வந்துள்ளார். மிட்டலின் பயணத்தில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், எல்லோரும் போதும் என ஓய்வு காலத்தை எட்ட நினைக்கும் காலத்தில் தான் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
மிட்டல் தனது வணிக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பு, 1955ம் ஆண்டே ஒரு எல்ஐசி ஏஜென்டாக தனது பணியை தொடர்ந்துள்ளார். அந்த காலகட்டத்தில் பல நடுத்தர வர்க்க இந்தியர்களை போலவே, அவரும் நிலையான வேலை, கணிசமான சேமிப்பையே தனது வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ளார். ஆனால் அந்த எளிமை தான் அவருக்கு பல விஷயங்களை கற்றுக் கொள்ள உதவியது. மிகப்பெரிய அனுபவங்களை கற்று கொடுத்தது. இதுவே 60 வயதில் சோனாலிகா நிறுவனத்தையே தொடங்கவும், அதை வெற்றிகரமான பாதைக்கு கொண்டு செல்லவும் உதவியது.
மிட்டல் வழக்கமான கடின உழைப்பாளி மட்டுமல்ல. மிக திறமையானவர். கல்வியிலும் கெட்டிக்காரர். பல பட்டம் பதக்கங்களை வென்றவர். இப்படி வலுவான கல்வி பின்னணியை கொண்டிருந்ததும் அவரின் வெற்றிக்கு உதவின. ஆனால் அந்த வெற்றி அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. ஏனெனில் பல சவால்களையும், பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார். குறிப்பாக விவசாய உபகரணங்களை விற்பனை செய்யும் ஒரு சிறு தொழில் மூலம் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்து, அதில் மோசமான தோல்வியையும் கண்டார்.
நிதி ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்தாலும் ஒருபோதும் முடங்கவில்லை, மாறாக பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்கினார். அவரின் தோல்விகள் தான் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தது. இதுவே 60 வயதிற்கு பிறகு சோனாலிகா நிறுவனத்தை தொடங்கவும் ஊக்குவித்தது. இன்று பல நாடுகளில் விரிவடைந்திருக்கும் இந்த டிராக்டர் நிறுவனம், 120 நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. மிட்டலின் இந்த பயணம் வெற்றிக்கு வயதில்லை என்பதையே காட்டுகிறது. இன்று மிட்டலின் நிகர மதிப்பு சுமார் 45,000 கோடி ரூபாயாகும். இன்று பல தலைமுறைகள் வந்து விட்டாலும் கூட இன்னும் அலுவலகங்களில் 93 வயதான இளைஞராக வலம் வந்து கொண்டு தான் உள்ளார்.


Click it and Unblock the Notifications