தெலுங்கானா: வேளாண் தொழிலை நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சமகால தேவைக்கேற்ப பன்முகப்படுத்தி வெற்றிகரமான தொழிலாக மாற்றியிருக்கிறார் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு விவசாயி. விவசாயத்தில் நஷ்டம் அடைந்து பலரும் விவசாயத்தை விட்டு வெளியேறி வேறு வேலைகளுக்கு செல்வதாக நாம் செய்திகளை காணும் நிலையில், குறிப்பிட்ட சிலர் மட்டும் இதில் புதுமைகளை கொண்டு வந்து இந்த தொழிலை தக்க வைத்த வருகின்றனர்.
அப்படி ஒரு விவசாயி தான் சிவி நரசிம்மராஜு. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 56 வயதான இவர் பாகமதி என்ற தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில் வேளாண்மை செய்து வருகிறார்.

1996 ஆம் ஆண்டு கல்லூரி பட்டப்படிப்பை முடித்த இவர் தன்னுடைய தந்தையின் நிலத்தில் விவசாயத்தை கற்றுக்கொள்ள தொடங்கினார். இதனை அடுத்து அவர் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட அவர் 2006 ஆம் ஆண்டு ஹீராலால் சவுத்ரி நேஷனல் கோல்ட் மெடல் வாங்கினார். அதேபோல மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள திறமையான நபர்களுக்கு மத்திய வேளாண் ஆய்வு கவுன்சில் வழங்கக்கூடிய கிஷான் புஷ்கர் விருதையும் இவர் வாங்கி இருக்கிறார்.
தங்கள் பகுதியில் இருக்கும் விவசாயிகள் எவ்வளவு தான் காய்கறி மற்றும் பழங்களை விளைவித்தாலும் அவற்றை முறையாக வைத்து பராமரிப்பதற்கு போதிய கிடங்கு வசதிகள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்து 2010 ஆம் ஆண்டு குளிர்பதன சேமிப்பு கிடங்கு வணிகத்தில் கால் பதித்தார்.
6 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கினை அவர் உருவாக்கினார். அவருடைய கிடங்கில் ஓர் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் டன்கள் மாம்பழம் மற்றும் வாழைப்பழங்கள் பராமரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன.
அது லாபகரமான தொழிலாக இருந்தாலும் இவர் 2022 ஆம் ஆண்டு வாழை விவசாயத்தில் கால்பதித்தார். 12 ஏக்கர் நிலத்தை முதலில் கையகப்படுத்தி வாழை விவசாயத்தில் ஈடுபட்டு தற்போது அதனை 48 ஏக்கராக விரிவாக்கம் செய்துள்ளார். கூடிய விரைவில் இதனை 100 ஏக்கராக விரிவாக்கம் செய்ய இருப்பதாக கூறும் இவர் வாழைப்பழத்தை விளைவித்து அதனை சேமித்து விற்பனை செய்வது வரை என அனைத்தையும் தானே மேற்கொள்வதாக கூறுகிறார்.
நரசிம்மராஜூவுக்கு குளிர்பன கிடங்கின் மூலம் ஒரு ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறதாம் அதேபோல வாழை விவசாயத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறுகிறார். விவசாயம் ஒரு உன்னதமான தொழில் எனக் கூறும் நரசிம்மராஜு நவீன காலத்திற்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொண்டு புதிய விஞ்ஞான நடைமுறைகளை விவசாயத்துடன் இணைத்தால் அனைவரும் நிச்சயமாக இதில் வெற்றி பெற முடியும் என கூறுகிறார்.
விவசாயிகள் ஒரு பயிரை மட்டுமே நம்பி இருக்காமல் கால மாற்றத்திற்கு ஏற்ப பயிர்களை பன்முகப்படுத்த வேண்டும் எனவும் நீடித்த நிலையான விவசாய நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்குகிறார். இயற்கை வேளாண்மை குறித்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பலருக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications