இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக்கம் செலுத்தும் துறையில் பெயர் தெரியாத அதுவும் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம் என்ற பின்புலம் இல்லாமல் இதைச் செய்வதற்கு உண்மையிலேயே மனத்துணிச்சல் வேண்டும். ஆனால் டெல்லியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் அகர்வாலுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல.
அப்போது இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் தயாரிக்கும் நிறுவனங்களே இல்லை. இந்த நிலையில் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை தயாரித்து அவற்றை வெளிநாட்டு நாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக தயாரித்தது மிகப் பெரும் சவால்தான்.

இந்தச் சவாலில் ஹரிகிருஷ்ணனின் கேம்பஸ் ஷூஸ் வெற்றியும் பெற்றது. விரைவில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று விற்பனையில் பெரும் சாதனையை படைத்தது. அவரது வெற்றிக்கதை சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு நல்லதொரு பாடமாகும்.
அத்லெடிக் ஷூக்களை தயாரிக்கும் கம்பெனியின் சிஇஓ இந்த ஹரிகிருஷ்ணன் அகர்வால். அவரது வாழ்க்கை வரலாறு என்பது அவரது நிறுவனம் இப்போது ஈட்டியுள்ள ரூ.9100 கோடியின் பின்னணியாகும்.
சாதாரணமாகத் தொடங்கிய ஒரு தொழிலை இந்திய வீடெங்கும் ஆக்கிரமிக்கும் அளவுக்கு உயர்த்தியதில் ஹரிகிருஷ்ணனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது.
கேம்பஸ் ஷூஸ் என்ற பிராண்டு மூலம் மக்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய அத்லெடிக் ஷூக்களை அவரது கம்பெனி தயாரித்தது. உலகப் புகழ்பெற்ற அடிடாஸ், ப்யூமா, நைக்கி ஆகிய ஷூக்களுக்கெல்லாம் இந்த கேம்பஸ் ஷூ செம டஃப் கொடுத்தது.
போர்ப்ஸ் பட்டியலில் இதன்மூலம் அகர்வால் புதிய இந்தியப் பணக்காரர் என்று கூறி 1.1 பில்லியன் சொத்து இருக்கிறது என இடம்பெற்றார்.
அயராமல் ஹரிகிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சியினாலும் உழைப்பினாலும் கேம்பஸ் ஷூஸ் நிறுவனம் வெற்றியின் உச்சிக்கே சென்றது.
தொடக்கத்தில் கேம்பஸ் ஷூக்களை சிறிய நகரங்களில் அறிமுகப்படுத்தினார். பின்னர் பெரிய மெட்ரோ நகரங்களை நோக்கி நகர்ந்தார். இதன் மூலம் தேசிய அளவில் அத்லெடிக் ஷூஸ் ஒன்று மலிவு விலையில் கிடைப்பதை ஹரிகிருஷ்ணன் உறுதி செய்தார்.
அவரது வியாபர உத்தியைக் கண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் மலைத்து விட்டன. நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கேம்பஸ் ஷூஸ்களுக்கு பெருத்த வரவேற்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கேம்பஸ் ஷுஸ்களைப் பார்த்து வெளிநாட்டு நிறுவனங்கள் பின்வாங்கத் தொடங்கி விட்டன.
கேம்பஸ் ஷூஸ் பல முன்னணி பிராண்டு ஸ்போர்ட்ஸ் ஷூக்களை முந்திவிட்டு முன்னணிக்கு வந்தது. 2022 நிதியாண்டில் 19.3 மில்லியன் ஜோடிகளை இந்த கேம்பஸ் ஷூஸ் விற்றது. இதன் மூலம் 158 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியது. ஐபிஓ வெளியிட்டபோது கேம்பஸ் ஷூஸ் பங்கு விலை 23 சதவீதம் உயர்ந்தது.
ஹரிகிருஷ்ணனின் மகன் நிகில் அகர்வால் இப்போது தொழிலை கவனித்து வருகிறார். 2023 நிதியாண்டில் ஹரிகிருஷ்ணன் அகர்வாலின் நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலர்களாகும் அதாவது 8500 கோடி ரூபாய்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications