தரமான ஒரு பொருளை விற்பனை செய்தால் நிச்சயமாக மக்களின் மனதில் நீண்ட காலத்திற்கு நீடித்த நிலையான ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்பதற்கு உதாரணமான ஒரு நிறுவனம் குறித்து தான் இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
கிளாஸ்மேட் நோட்புக்குகளை நம்மால் மறக்க முடியுமா? வகுப்புக்குள் கிளாஸ்மேட் நோட்புக்குகளை கொண்டு செல்வதே கெத்தான உணர்வை தரும்.

இப்படி நமக்கு பிடித்தமான ஒரு பிராண்டாக கிளாஸ்மேட் நோட்டுகள் மாற என்ன காரணம் தெரியுமா? அதன் தரம். ஆம் , தரமான ஒரு பொருளை மக்களுக்கு வழங்கினால், எவ்வளவு விலையாக இருந்தாலும் மக்கள் விரும்பி வாங்குவர். இது தான் கிளாஸ்மேட் நோட்புக்கின் வெற்றிக்கான தாரக மந்திரம்.
2003 முதல் விற்பனை: ஐடிசி லிமிடெட் நிறுவனம் 2003ஆம் ஆண்டு கிளாஸ்மேட் என்ற பிராண்டின் கீழ் நோட்டுகள் விற்பனையில் இறங்கியது. கிளாஸ்மேட் நோட்டுகள் விற்பனைக்கு வந்த காலத்தில் , மற்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் நோட்டுகள் தயாரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்த நிலையில், கிளாஸ்மேட் மட்டும் தரத்திற்கு முன்னுரிமை கொடுத்தது.
கிரியேட்டிவான வடிவமைப்பு: நோட்புக்குகள் என்றாலே குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை கொடுப்பவையாக இருக்க கூடாது என முடிவெடுத்து, கடைசி பக்கத்தில் கிரியேட்டிவாக சிறு சிறு துணுக்குகள், விளையாட்டுகள் அடங்கிய வகையில் வடிவமைத்தது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் இந்த வகை நோட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்பவும் நோட்டுகள் கிடைப்பதே பெரும்பாலானவர்களின் விருப்ப பட்டியலில் சேர்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது. அதுமட்டுமின்றி நீண்ட காலம் உழைக்க கூடியவையாக இந்த நோட்டுகள் வடிவமைக்கப்பட்டன.
மென்மையான தாள், நல்ல எழுத்து அனுபவத்தை வழங்கின. குறிப்பாக நோட்டுகளின் அட்டை பக்கங்களின் மாணவ , மாணவிகளுக்கு பிடித்த கார்ட்டூன் படங்களை அச்சிட்டு அனைவருக்கும் விருப்பமான பிராண்டாக மாறியது கிளாஸ்மேட் நோட்புக்.
நோட்டுகளில் தொடங்கி, பின்னர் படிப்படியாக பென், பென்சில்கள், ஜியாமெட்ரிக் பாக்ஸ்கள் என பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் விற்பனை செய்ய தொடங்கினர். இவற்றுக்கும் மாணவர்களிடையே வரவேற்பு கிடைத்தது.
மாறிவரும் தேவைக்கு ஏற்ப புதுமைகளை புகுத்தி , எப்போதும் முன்னணியில் இருக்கிறது கிளாஸ்மேட் நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள்.
கிளாஸ் மேட் நோட்டுகளின் வெற்றிக்கான ரகசியமே, தரம், புதுமை, வடிவமைப்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவை தான். ஒவ்வொரு நோட்டும் தனி கவனம் செலுத்தி வடிவமைக்கப்படுகிறது.
கிளாஸ்மேட் நிறுவனம் அடிக்கடி மாணவர்களுக்கான போட்டிகள் என தேசிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இவற்றுக்கும் மாணவர்களிடையே வரவேற்பு உள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications