வர்த்தக துறையில் ஒருவர் வேகமாக வெற்றி அடைய வேண்டுமென்றால் சந்தையில் யாரும் செய்யாதது, இதேபோல் மக்கள் மத்தியில் அதிகமாக டிமாண்ட் இருக்கும் சேவைகளையும், பொருட்களையும் சரியான பிராண்டிங் உடனும் அதற்கான கட்டமைப்பு உடனும் வர்த்தகம் செய்தால் வெற்றி நிச்சயம்.
ஆனால் இதுப்போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது, இதேபோல் வரும் வாய்ப்பை எந்த காரணத்திற்காகவும் விட்டுவிட கூடாது. பீகாரில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த அருணாப் சின்ஹா, தனது மனைவி குஞ்சன் சின்ஹாவுடன் சேர்ந்து அழுக்கு துணியை அடிப்படையாக வைத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளனர்.

அருணாப் சின்ஹா வட இந்தியாவில் குறைந்த கட்டண ஹோட்டல்களின் செயல்பாடுகளை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்த ஹோட்டல் துறையில் அடிப்படையில் பார்க்கும் போது நாடு முழுவதும் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை சலவை தொடர்பானது என்பதை அருணாப் கண்டுபிடித்தார். இதில் வர்த்தகத்தை துவங்கினால் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய முடியும் என நம்பி அவருக்கு அனுபவம் நிறைந்த வட இந்தியாவிலேயே வர்த்தகத்தை துவங்கினார்.
இந்தியாவில் சலவைத் துறையை கட்டமைக்கப்படாமல் தனித்தனியாக இருந்தது, இதை ஒழுங்கமைக்கும் ஒரு வாய்ப்பு மட்டும் அல்லாமல் புதிய வர்த்தக மாடல் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பினார் அருணாப் சின்ஹா.

சலவைத் துறையில் முக்கியமான விஷயம்தரம் மற்றும் நிலையான சேவை தான். இதை அடிப்படையாக வைத்து அருணாப் சின்ஹா மற்றும் அவருடைய மனைவியும் சேர்ந்தார். இதற்காக அருணாப் ஆகஸ்ட் 2016 இல் தனது வேலையை விட்டுவிட்டார், அவர்கள் ஜனவரி 2017 இல் ரூ 20 லட்சம் முதலீட்டில் UClean என்ற சலவை சேவையைத் தொடங்கினார்கள். இந்நிறுவனத்தின் மதிப்பு தற்போது 100 கோடி ரூபாய்.
அருணாப் சின்ஹா ஒரு IIT மாணவர் தனது வேலையை விட்டு விலகும் முடிவை எடுத்தபோது, ஆண்டுக்கு ரூ.84 லட்சம் சம்பாதித்து வந்தார். அனுராப் முன்பு ஒரு சாதாரண வீட்டில் வசித்து வந்தார். அவர் ஒரு விடா முயற்சியுள்ள மாணவர் ஐஐடி கல்லூரியில் சேர்வதற்காக 8ஆம் வகுப்பில் படிக்கத் தொடங்கினார்.

கல்லூரி படிப்பை தொடர்ந்து வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டார், அங்கு சில ஆண்டுகள் பணியாற்றி 2015 இல் திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் ஸ்டார்ட்அப் UClean அல்ல, ஃபிராங்லோபல் என்ற நிறுவனத்தை நிறுவி தோல்வி அடைந்த காரணத்தால் Tribo Hotels-ல் பணியில் சேர்ந்தார்.
UClean வர்த்தகம் ஆரம்பம் முதல் மக்கள் மத்தியில் குறிப்பாக வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பை பெற்றது. அதிமானோர் சலவைக்கு துணிகளை கொண்டு வர துவங்கினர் 20 லட்சம் ரூபாயில் துவங்கிய வர்த்தகம் இன்று 100 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications