கோவை இளைஞர்கள் அசத்தல்.. உணவு பிரியர்களை வாவ் சொல்ல வைக்கும் soklet!

ஒருவர் தனக்கு பொருத்தமான ஒரு தொழிலை தேர்தெடுப்பது என்பது எளிதான விஷயமல்ல. இதற்கு அந்த தொழில் போதிய அனுபவம் என்பதோடு, நிர்வாகம், சரியான மூலதனம் என அனைத்தும் கொண்டிருப்பது மிக அவசியமான ஒன்று.

பொதுவாக தொழில் செய்பவர்கள் தங்கள் பகுதிகளில் கிடைக்கும் மூலதன பொருட்களை கொண்டு செய்யும் தொழிலை தேர்தெடுப்பார்கள். அப்படி இல்லாவிடில் அவரவர் இருக்கும் பகுதியில் எதனை தயாரிக்க முடியும் என்பதை பொறுத்தும் தேர்தெடுப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது உள்ள அதீத ஆர்வம் காரணமாக ஒரு சிலர் தங்கள் வணித்தினை தொடங்குவர்.

கோயம்புத்தூர் மைத்துனர்கள்

கோயம்புத்தூர் மைத்துனர்கள்

இப்படி தான் கோயம்புத்தூரை சேர்ந்த மைத்துனர்கள் இருவர் வித்தியாசமான ஒரு தொழிலை தேர்வு செய்துள்ளனர். இது இன்று அவர்களை உலகம் முழுக்க பல நாடுகளுக்கு எடுத்து சென்றுள்ளது எனலாம். மேலை நாடுகளில் கோகோ பழம் மற்றும் கோகோ பவுடர்கள் மீதான ஆர்வம் என்பது மிக அதிகம். இதனை வெளி நாடுகளில் பல வகையான உணவு பொருட்களை தயாரிக்க பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சாக்லேட் தயாரிப்பு, கேக் தயாரிப்பு என பல வகையிலும் பயன்படுத்தப்படுகிறது.

முதல் பிராண்ட்

முதல் பிராண்ட்

கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் பழனிச்சாமி மற்றும் ஹரிஷ் மனோஜ் குமார் இருவரும் இணைந்து, அனைத்து தரப்பினரும் விரும்பும் சாக்லேட் பிராண்டான சோக்லெட்டை(Soklet) அறிமுகப்படுத்தியுள்ளனர். சோக்லெட் இந்தியாவின் முதல் மற்றும் மரத்திலிருந்து பார் சாக்லேட் உற்பத்தி செய்யும் முதல் உற்பத்தியாளர் ஆகும்.

 எப்படி தொடக்கம்?

எப்படி தொடக்கம்?

கடந்த 2015ல் ஒரு நாள் மாலை பானம் அருந்திக் கொண்டிருக்கையில், இருவருக்கும் திடீரென உதித்த ஐடியா தான் இது. இருவரும் கோவை என்றாலும், இரு வேறு வேறு பின்னணிகளை கொண்டவர்கள். எனினும் வணிகம் செய்ய வேண்டும். அதுவும் பிடித்தமான வணிகம் செய்ய வேண்டும், ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதில் குறியாய் இருந்துள்ளனர். இதில் கார்த்திகேயன் அவரின் குடும்பத் தொழிலான டெக்ஸ்டைல் தொழிலை செய்து வந்தவர். இதே ஹரீஷ் ஆனைமலையில் உள்ள பண்ணை கவனித்து கொண்டிருந்தவர்.

எப்படி இந்த வணிகம்

எப்படி இந்த வணிகம்

ஹரீஷ் ஏற்றுமதி வணிகத்தில் ஆர்வமாக இருந்த நிலையில், கார்த்திகேயனும் இதில் ஆர்வமாக இருந்துள்ளார். இந்த நிலையில் தான் இருவரும் இணைந்து வணிகம் செய்ய நினைத்தனர். இது குறித்து கார்த்திகேயன் தி பெட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் நான் எப்போதும் சொந்தமாக ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். அதோடு நான் ஒரு உணவு பிரியர். இதனால் இந்த வணிக திட்டம் என்னை மிகவும் உற்சாகமடைய செய்தது. இறுதியில் நாங்கள் சோக்லெட்டை தொடங்கினோம் என்று கூறியுள்ளார்.

மரம் முதல் சாக்லேட் வரை

மரம் முதல் சாக்லேட் வரை

இந்த சோக்லெட் மற்ற சாக்லேட் பிராண்டுகளை போல் அல்லாமல்,
மத்திய கேரளாவின் தெற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை மலையின் அடிவாரத்தில் உள்ள நிறுவனத்தின் சொந்த சொத்தாக இருக்கும் ரீகல் தோட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
கோகோ பழம் தொடங்கி முழு சாக்லேட் தயாரிக்கும் செயல்முறையையும் சோக்லெட் கையாளுகிறது.

பல வகையான சுவை மிகுந்த பொருட்கள்

பல வகையான சுவை மிகுந்த பொருட்கள்

சோக்லெட் மசாலா, கோகோ பவுடர், கோகோ சாக்கோ பார்கள், கோகோ காஃபி பவுடர்கள், பியூர் டார்க் டிரிங்கிங் சாக்லேட் என பல ஆடம்பர பொருட்களையும் சோக்லெட் தயாரித்து விற்பனை செய்கிறது. ஏற்றுமதியும் செய்து வருகின்றது.

இதில் தனித்துவமான விஷயம் என்னவெனில் முழுக்க ஆர்கானிக் ஆக வளர்க்கப்படும் இந்த கோகோ பழங்கள், கையாள் பறிக்கப்படுகின்றன. இதனால் இதன் சுவை மாறமல் தனித்துவமாக உற்பத்தி செய்யப்படுகின்றது.

 பல நாடுகளுக்கு ஏற்றுமதி

பல நாடுகளுக்கு ஏற்றுமதி

இப்படி பல்வேறு வகையான பிராண்டுகளை கையாளும் சோக்லெட் அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மேற்கண்ட நாடுகளுக்கு 24 டன்களை சோக்லெட் ஏற்றுமதி செய்கின்றது.

சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி

சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி


சர்வதேச சாக்லேட் பிராண்டுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி,இன்று சர்வதேச பிராண்டுகளுடன் போட்டி போடும் சோக்லெட், நம்மூர் சமயலறையில் தொடங்கியது. இது குறித்து இணையத்தில் பார்த்து சமைத்து ருசி பார்த்து, ஒவ்வொரு தவறுகளையும் கண்டு பிடித்து, அதனை சரி செய்ததாக கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பல சவால்கள்

பல சவால்கள்

ஆரம்பத்தில் பல சவால்களை சந்தித்தவர்கள், பலகட்ட சோதனைகளை செய்த பிறகே சாக்லெட் பக்குவத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதன் முதல் சுவையாளர்கள் அவர்கள் கட்டிடத்தின் அருகில் இருந்த குழந்தைகள் என கூறுகின்றனர். கடந்த 2016ல் நிதின் சோர்டியாவை சாக்லெட் ருசி குறித்து கேட்டறிய அணுகியதாகவும், முதலில் அவர் அதனை துப்பிவிடுவார் என எதிர்பார்த்தேன்.

வெற்றிகரமான பிராண்ட்

வெற்றிகரமான பிராண்ட்

ஆனால் அவர் அங்கு ஏதோ இருக்கிறது என்றும் கூறினார். எனினும் இன்னும் பல சவால்களை தாண்டி செல்ல வேண்டும் என்றும் நிதின் எச்சரித்தார். எனினும் பல்வேறு வகையான சவால்கள், ஆராய்ச்சி என தாண்டி, இன்று வெற்றிகரமான ஒரு பிராண்டாக சோக்லெட் வலம் வந்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த குழு 4 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது.

மொத்தத்தில் தனித்துவனமான வணிக யோசனை, விடாமுயற்சி, ஆர்வம், எல்லாவற்றிற்கும் மேலாக சோக்லெட்டின் ருசி இன்று சர்வதேச அளவில் பிரபலமடைய செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+