சுசீர் பாலாஜியின் மரணத்தில் திடீர் திருப்பம்.. அந்த கம்பியூட்டர்.. அடுத்தடுத்து எழும் சந்தேகம்..!

சான் பிரான்சிஸ்கோ: சாட்ஜிபிடி-யின் உரிமையாளரான ஓபன்ஏஐ நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுசீர் பாலாஜி நவம்பர் மாதம் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் சுசீர் பாலாஜியின் மரணத்திற்கு முன்னர் அவர் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக இருந்தார் என அவருடைய குடும்பத்தினர் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். 26 வயதான இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுசீர் பாலாஜி, ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். நவம்பர் 26 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வீட்டில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

சுசீர் பாலாஜியின் மரணத்தில் திடீர் திருப்பம்.. அந்த கம்பியூட்டர்..  அடுத்தடுத்து எழும் சந்தேகம்..!

அவர் உயிரிழப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்க காப்பிரைட் சட்டங்களை மீறி செயல்படுவதாகவும் ,சட்டங்களை மீறி தான் சாட்ஜிபிடிஐ உருவாக்கியது என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய மரணம் தற்கொலையா அல்லது கொலையா என பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. காவல்துறையினர் தரப்பில் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுசீர் பாலாஜி ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு எதிரான தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு சாதகமான ஆதாரங்களை திரட்டி வந்ததாகவும் அதனை ஊடகங்களில் வெளியிடுவதற்கு அவர் தயாராக இருந்ததாகவும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார். ஆதாரங்களை திரட்டி வருகிறேன் இதனை பொதுவெளியில் வெளியிடப் போகிறேன் என தன்னிடம் அவர் கூறியதாக அவருடைய தாயார் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சுசீர் பாலாஜி கோழை அல்ல என தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் சுசீர் பாலாஜி இறப்பதற்கு முன்பாக அவருடைய கணினியை வேறு யாரோ சந்தேகத்திற்கு இடமான முறையில் பயன்படுத்தி உள்ளனர் என குற்றம் சாட்டுகின்றனர்.

அவருடைய கணினியை யார் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாக அவருடைய குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு பாலாஜியின் தாயார் பூர்ணிமா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தன் மகனின் மரணம் குறித்து எஃப்பிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு விசாரணையாளரை நியமனம் செய்து இரண்டாவது முறையாக அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்திருக்கிறோம், பாலாஜியின் மரணத்திற்கு இதுதான் காரணம் என காவல்துறையினர் கூறியதற்கும் நாங்கள் எடுத்த பிரேத பரிசோதனையில் கிடைத்த தகவல்களும் மாறுபட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார் .

பாலாஜியின் அப்பார்ட்மெண்டில் யாரோ நுழைந்து பொருட்களை எடுக்க முயன்றிருப்பது தெரியவருகிறது, மேலும் கழிவறையில் யாரோ அவரை துன்புறுத்தி இருக்கின்றனர், அதற்கு ஆதாரமாக ரத்த கரைகள் இருக்கின்றன என அவருடைய தாயார் கூறுகிறார். இது ஒரு கொலை ஆனால் காவல்துறையினர் இது தற்கொலை என கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார். என்னுடைய மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+