சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் 8 மாதத்தில் ஆடை அணிகலன் பிராண்டை உருவாக்கி 9 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றி இருக்கின்றனர். நவீன ஆடைகளை குறைந்த விலையில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய நோக்கம்.
சௌராஷ்டிரா என்ற சிறிய நகரை சேர்ந்தவர் தான் ஹிரன் லத்தியா, ஒரு சாதாரண குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அரசு பள்ளியில் கல்வி பயின்றார் அவர் பள்ளி படிப்பை முடித்தவுடன் மேற்படிப்புக்காக சூரத் நகருக்கு சென்றார்.

அங்கே பட்டப் படிப்பை முடித்துவிட்டு இந்தியா மார்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இவருடைய வேலை என்னவென்றால் வியாபாரிகளை தொடர்பு கொண்டு பேசி இந்தியா மார்ட் தளத்தில் அவர்களை பதிவு செய்ய வைத்து அவர்களுடைய பொருட்களை விற்பனை செய்ய வைப்பது தான். இதன் மூலம் வருங்காலத்தில் ஈகாமர்ஸ் தளங்களின் வளர்ச்சியை அவர் கணித்தார்.
தன்னுடைய சகோதரர் தர்ஷனிடம் பேசி ஈ-காமர்ஸ் துறையின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். இவருடைய மற்றொரு சகோதரரான வீரன், கனடாவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் மேற்படிப்பை முடித்து விட்டு அப்போது தான் நாடு திரும்புகிறார்.
மூன்று சகோதரர்களும் இணைந்து 2014 ஆம் ஆண்டில் புடவை, குர்தா உள்ளிட்ட ஆடைகளை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்ய தொடங்கினர். Leemboodi ஃபேஷன் என்ற பெயரில் இவர்கள் ஆடைகளை விற்பனை செய்தனர்.
இவர்களின் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இருந்தாலும் இவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே முறையாக திட்டமிட்டு 2023 ஆம் ஆண்டில் இந்த சகோதரர்கள் மூன்று பேரும் இணைந்து சுடாத்தி (Sudathi )என்ற சூரத்தை தலைமை இடமாகக் கொண்ட மலிவு விலை ஆடை பிராண்டை தொடங்கினர்.
புடவை ,குர்தா மற்றும் மேற்கத்திய ஆடைகள் என அனைத்து நவீன ஆடைகளும் தரமான முறையில் ஆனால் பட்ஜெட் விலையில் விற்பனை செய்கின்றனர். உதாரணமாக, குர்தா பேண்ட் மற்றும் துப்பட்டா செட் இவர்களிடம் 899 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் மற்ற பிராண்டுகளில் இதே 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவர்களிடம் இருக்கும் பொருட்களில் அதிகமாக விற்பனையாவது பனாரசி புடவைகள் தானாம். 499 ரூபாயில் தொடங்கி இவை நல்ல விற்பனை செய்யப்படுகின்றன என கூறுகின்றனர். இந்த பிராண்டை தொடங்கிய மூன்றே மாதங்களில் இந்த சகோதரர்கள் ஒரு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி உள்ளனர். சுமார் 70 ஊழியர்களை பணிக்கு அமர்த்தி நிறுவனத்தை தொடங்கியவர்கள் தற்போது 800 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளனர்.
மேலும் சூரத்தில் இருந்து மூலப்பொருட்களை வாங்குவது நவீன இயந்திரங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இவர்களின் தொழிலுக்கான செலவு என்பது கணிசமான அளவு குறைந்து லாபம் அதிகமாக இருக்கிறது.
இவர்களது உற்பத்தி ஆலையில் ஒரு மாதத்திற்கு 2.5 லட்சம் துணிகளை தயாரிக்க முடியுமாம். பண்டிகை காலங்களில் இவர்கள் வெளியில் இருக்கக்கூடிய ஆலைகளை குத்தகைக்கு எடுத்து ஒரு மாதத்திற்கு 4 லட்சம் ஆடைகளை உற்பத்தி செய்கிறார்களாம்.
சூரத்தில் இவர்களுக்கு தரமான துணிகள் கிடைப்பதால் இவர்களால் குறைந்த விலையிலேயே துணிமணிகளை தயாரித்து விற்பனை செய்ய முடிகிறது. தரமான பொருட்களை வழங்கினாலே போதும் வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவார்கள் என்பது தான் இவர்களது தாரக மந்திரம்.
தற்போது இவர்கள் மாதத்திற்கு 9 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். சமூக வலைதளங்களான யூடியூப் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றை இவர்கள் பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications