மெட்டா, அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இது ஒரு அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் , த்ரெட்ஸ் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சொந்தமாகக் கொண்டு செயல்படுகிறது. இது உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழப்படுகிறது.
இத்தகைய, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மெட்டா, அதன் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், திடீர் வேலைநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மெட்டா நிறுவனம் இந்த வாரம் கிட்டத்தட்ட 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து, மீண்டும் ஒரு சுற்று வேலை நீக்கத்தை செய்துள்ளது. தங்கள் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களும் இந்த வேலைநீக்கத்தின் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இத்தகைய முடிவு, பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, நிறுவனத்தின் உள்துறை செயல்பாடுகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மேலாண்மை முடிவுகள் அடிப்படையில், மெட்டா நிறுவனம், அதன் செலவுகளை குறைக்கும் நோக்கில், மேலாளர்களுக்கு 2024 முதல் உள்துறை உத்தரவுகளை வழங்கி வருகிறது. முதலில், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட தொழிலாளர்களில் 5% பேரை குறைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுவே போதுமானதாக இல்லை என நிறுவனம் கருதியதால், மேலாளர்கள் சில உயர்ந்த மதிப்பீடு பெற்ற ஊழியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த தகவல் பொதுவாக ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. இதனால், பணிநீக்க அறிவிப்பு வந்தபோது, பலருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.பல ஊழியர்கள் தங்களது ஆண்டு இறுதி மதிப்பீடுகளில் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாக (Exceeds Expectations) என்ற மதிப்பீட்டை பெற்றிருந்தாலும், அவர்கள் திடீரென குறைந்த செயல்திறன் (Low Performance) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மெட்டாவின் வேலைநீக்க நடவடிக்கைகள் ஊழியர்களிடையே மிகுந்த பதற்றத்தையும் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில், பலர் தொழில்நுட்ப துறையில் வேறு வேலை வாய்ப்புகளைக் காண்பதற்கு போராடி வருகிறார்கள்.மெட்டாவின் வேலைநீக்க நடவடிக்கைகள், அதன் நிறுவன பண்பாட்டைப் பற்றி புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்தகைய முடிவுகளைப் பற்றி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் கூறியது:
நான் கடந்த ஆண்டு தொடர்ந்து நல்ல மதிப்பீடுகளைப் பெற்றிருந்தேன். எனது மேலாளர் என் செயல்திறனை எப்போதும் பாராட்டியிருக்கிறார். ஆனால், திடீரென்று நான் குறைவான செயல்திறன் கொண்டவனாக மாற்றப்பட்டுள்ளேன். இது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு ஊழியர், நான் சிறப்பாக செயல்பட்டு வந்தேன். ஆனால், வேலைநீக்க மின்னஞ்சல் வந்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த முடிவு எப்படிப் போடப்பட்டது என்பதை நிறுவனம் தெளிவாக விளக்கவில்லை."இது திட்டமிட்ட வேலைநீக்க நடவடிக்கையாக இருக்கலாம் என ஊழியர்கள் சந்தேகிக்கிறார்கள் என கூறியுள்ளார்.
பணிநீக்கங்களை தொடர்ந்து மெட்டாவின் எதிர்காலம் மெட்டா நிறுவனம் Artificial intelligence (AI) மற்றும் Virtual reality(VR) தொழில்நுட்பங்களில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், நிறுவனம் தனது பணியாளர்களை மறுசீரமைத்து, தேவையற்ற பணியாளர்களை குறைப்பதை முன்னுரிமை கொடுத்துள்ளது.
மேலும், மெட்டா,Machine Learning பொறியாளர்களை அதிகம் பணியமர்த்த திட்டம் வைத்துள்ளது. இதனால், நிறுவனம் குறைந்த செயல்திறன் கொண்டதாக கருதும் பணியாளர்களை தொடர்ந்து நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டாவின் வேலைநீக்கம், தனிப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தொழில்நுட்ப துறையின் வேலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. நல்ல மதிப்பீடுகளைப் பெற்ற ஊழியர்களும் வேலையை இழந்ததால், இது நிறுவனம் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதே போன்று, பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தன்னியக்க முறைகளை அதிகரித்து, மனிதர்களின் பங்கை குறைக்கும் முயற்சியில் உள்ளன. இதனால், வேலைவாய்ப்புகள் குறைந்து, பல தொழிலாளர்கள் எதிர்காலத்தைப் பற்றிய பாதுகாப்பு உணர்வை இழக்க நேரிடலாம்.
இதன் எதிர்கால பாதிப்புகள் என்னவாக இருக்கும்? தொழில்நுட்ப நிறுவனங்கள் உண்மையில் ஊழியர்களுக்கு நியாயமான வேலைநிலைகளை வழங்குகின்றனவா? இதற்கான பதிலை எதிர்காலம் மட்டுமே சொல்லும்!!!


Click it and Unblock the Notifications