இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மனைவி மற்றும் எழுத்தாளர் சுதாமூர்த்தி சமீபத்தில் NDTV-க்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். இதற்கு முன்னர் நாராயணமூர்த்தி இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது பெரும் விவாதமாக மாறியது. அப்படி இருக்கையில் தன் கணவர் ஏன் நீண்ட நேரம் வேலை பார்க்கச் சொன்னார் என்ற கருத்துக்கு சுதா மூர்த்தி பதிலளித்துள்ளார்.
NDTV-க்கு சுதா மூர்த்தி அளித்த பேட்டியில் வேலை செய்பவர்கள் தங்களுடைய வேலையில் ஆர்வமாக இருக்கும் போது நேரம் ஒரு பெரிய பிரச்சினையாக தெரியாது என்று கூறினார். சுதா மூர்த்தி தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் தன்னுடைய கணவர் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ததாகவும், அதனால்தான் குறைந்த நிதியில் இன்ஃபோசிஸை உருவாக்க முடிந்தது என்றும் விளக்கம் அளித்தார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற்றிய மந்திரக்கோல் வேறு எதுவும் இல்லை. வெறும் கடின உழைப்பு, சரியான நேரத்தில் சரியான இடத்தில் செயல்பட்டது தான்.
ஆரம்ப காலங்களில், நாராயண மூர்த்தி நீண்ட நேரம் வேலை பார்த்தபோது தான் எதிர்கொண்ட தனிப்பட்ட தியாகங்கள் குறித்தும், குடும்ப வாழ்க்கையை எவ்வாறு அவர் சமநிலைப்படுத்தினார் என்பது குறித்தும் பேட்டியில் கூறினார். அப்போதெல்லாம் நாராயணமூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்குவதில் முழுமூச்சாக இருந்தார்.
இதை தெரிந்து கொண்ட சுதாமூர்த்தி தன் கணவர் ஒரு பெரிய வேலையில் இருந்ததாகவும், இதனால் அவரிடம் சென்று புலம்புவதை நிறுத்த முடிவு எடுத்ததாகவும் பேட்டியில் கூறினார். தனது கணவரை உணர்ந்து அவரது கடின உழைப்பை மதித்து அதற்காக தனது சொந்த தேவைகளையும் நேரத்தையும் எவ்வாறு சுதா மூர்த்தி தியாகம் செய்தார் என்று பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
அதோடு தனது கணவர் மட்டும் இதே போன்ற அர்ப்பணிப்புடன் செயல்படவில்லை. மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்ற பிற துறைகளில் பணிபுரிபவர்களும் இதே போல் தான் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய அர்ப்பணிப்பும் சமுதாயத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புகளை வழங்குகின்றன என்று கூறினார்.
கணவரின் வேலையால் ஏற்படும் தனிமை மற்றும் நேரமின்மையை மாற்ற சுதா மூர்த்தி தனக்கான பாதையை அமைத்துக் கொண்டார். "எனக்கு நேரம் இல்லை அல்லது உங்களுக்கு நேரம் இல்லை என்று நினைக்காமல், நான் பிஸியாக இருப்பதற்கு வேறு வழியை உருவாக்க கற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.
காலத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் சுதாமூர்த்தி கடவுள் அனைவருக்கும் 24 மணி நேரத்தை கொடுத்து இருக்கிறார். நீங்கள் பணக்காரராக இருந்தாலும் சரி.. ஏழையாக இருந்தாலும் சரி.. அழகாக இருந்தாலும் சரி.. அழகற்றவராக இருந்தாலும் சரி.. எனவே அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது என்றும், நீங்கள் எதையாவது செய்ய விரும்பினால் அதற்கு நேரம் தேவை. உங்கள் வேலையில் ஆர்வமாக இருந்தால் அதை உங்கள் துணையும் ஆதரிக்க வேண்டும் என்று கூறி பேட்டியை முடித்தார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications