பெங்களூர்: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், எழுத்தாளரும், சமூக சேவகருமான திருமதி சுதா மூர்த்தி ராஜ்யசபா உறுப்பினராகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வெள்ளிக்கிழமை திருமதி சுதா மூர்த்தி அவர்கள் ராஜ்யசபாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் திருமதி சுதா மூர்த்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, "இந்திய குடியரசுத் தலைவர் சுதா மூர்த்தி அவர்களை ராஜ்யசபாவுக்கு பரிந்துரை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
சமூக சேவை, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா ஜியின் பங்களிப்பு மிகவும் பிரமிக்க வைக்கிறது மற்றும் ஈர்க்கிறது. ராஜ்யசபையில் அவரது இருப்பு நம் நாட்டின் 'நாரி சக்தி'க்கு ஒரு வலுவான சான்று, நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் பலம் மற்றும் திறனை இதை எடுத்துக்காட்டுகிறது. அவர் சிறப்பான நாடாளுமன்ற பதவிக்காலத்தைப் பெற வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, புதிய பாராளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின் போது, அதைப் பார்வையிட அரசு தரப்பில் இருந்து அவர் அழைக்கப்பட்டார். அப்போது வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசும்போது, சுதா மூர்த்தி அவர்கள் புதிய கட்டிடம் குறித்த தனது வியப்பு பகிர்ந்துக்கொண்டார்.
இப்போது ஒரு செய்தியாளர் "நீங்கள அதிகாரப்பூர்வ பதவியுடன் உள்ளே செல்ல விரும்புகிறீர்களா?" என்று கேள்வி கேட்டதற்கு, 73 வயதான சுதா மூர்த்தி கைகளை கூப்பி தலையை வேண்டாம் என அசைத்து, "நான் என்னுடைய இடத்தில், மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றார்.
ஆனால் இப்போது சுதா மூர்த்தி உண்மையிலேயே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி செய்த சமுக சேவையை பாராட்டும் விதிமாக பத்ம பூஷன் விருது 2023ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செய்தியாளர் கேள்வி பதில் சம்பவம் நடந்தது.
இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் சமூக சேவகருமான திருமதி சுதா மூர்த்தி, வெள்ளிக்கிழமை அன்று ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதையடுத்து, இது தனக்கு கிடைத்த "பெண்களுக்கான பெரிய விருது" என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவரது நியமனத்தைப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்தார்.
CNN News18 உடனான உரையாடலில், "நான் மகிழ்ச்சியடைகிறேன், அதே நேரத்தில் எனக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் உணர்கிறேன். என்னுடைய பணியை பிரதமர் மோடி பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகளுக்காகப் பணிபுரிவதற்குப் பெரிய தளம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை ஒரு அரசியல்வாதி என்று கருத முடியாது. நான் நியமனம் செய்யப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர். என் மருமகனின் நாட்டுக்கான அரசியல் வேறு, என்னுடைய பணி வேறு..." என்று
"இது எனக்கு பெண்கள் தினத்திற்கான பெரிய விருது. நாட்டுக்காக பணியாற்றுவதற்கான புதிய பொறுப்பு" என்றும் அவர் கூறினார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications